பிரித்தானிய அரச குடும்பத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இருவர்… நெகிழவைக்கும் கடிதங்களால் ஆறுதல்
மன்னர் சார்லசும் சாரா பெர்குசனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெகிழவைக்கும் கடிதங்களால்
பிரித்தானிய மன்னர் 75 வயதான சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 5ம் திகதி அறிவித்திருந்தார். இதேப்போன்று இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி 64 வயதான சாரா பெர்குசனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது.
இந்த நிலையில் சார்லஸ் மன்னரும் பெர்குசனும் நெகிழவைக்கும் கடிதங்களால் தங்களைத் தேற்றிக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சார்லஸ் மன்னரும் சாரா பெர்குசனும் நெருக்கமான நட்புறவை பேணி வருபவர்கள் என்றே கூறப்படுகிறது.
தற்போது இருவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், உருக வைக்கும் கடிதங்களால் ஆறுதல் அடைந்து வருவதாக கூறுகின்றனர். ஜனவரி 26ம் திகதி லண்டன் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சைக்காக மன்னர் சார்லஸ் அனுமதிக்கப்பட்டார்.
புற்றுநோய்க்கான சிகிச்சை
ஆனால் 24 மணி நேரம் கூடுதலாக மருத்துவமனையில் அவர் தங்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையிலேயே சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து தற்போது மன்னருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாரா பெருகுசன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது அறிந்ததும் மன்னர் சார்லஸ் உருக்கமான கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளார். தற்போது ஆஸ்திரியாவில் சிகிச்சை மேற்கொண்டுவரும் சாராவும் மன்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.