இந்திய அளவில் அதிக பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலம் எது? விவரங்கள் உள்ளே
இந்திய அளவில் அதிகமானோர் பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலம் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் மாநிலம் எது?
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் Passport தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிக எண்ணிக்கையிலான இந்திய பாஸ்போர்ட் கொண்டவர்களின் மாநிலமாக கேரளா விளங்குகிறது.
அதாவது சுமார் 4 கோடி மக்கள் தொகை கொண்ட கேரளாவில் 99 லட்சம் பேர் Passport வைத்துள்ளனர். இந்தியாவில் அதிகமான மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் 88 லட்சம் பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 98 லட்சம் பேரும், பஞ்சாப் மாநிலத்தில் 70.14 லட்சம் பேரும் பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.
குறிப்பாக கேரள மாநிலத்தில் உள்ள 99 லட்சம் பாஸ்போர்ட்டுகளில் 42 லட்சம் பேர் பெண்கள். இந்த பிரிவிலும் கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல மஹாராஷ்டிராவில் 40.8 லட்சம் பெண்கள் பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.
மேலும், உத்தர பிரதேச மாநிலத்தில் 80 % மேல் ஆண்களும், 17.3 லட்சம் பெண்களும் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். இதுவே இந்திய அளவில் பார்க்கும் பொது 35 சதவீதம் பெண்கள் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். அதாவது இந்தியாவில் உள்ள 8.8 கோடி பாஸ்போர்ட்டுகளில் 3.1 கோடி பெண்கள் பாஸ்போர்ட் கொண்டுள்ளனர்.
முக்கியமாக, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள் வரை கேரளாவைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். அதுவும், சமீப காலமாக மால்டோவா போன்ற நாடுகளுக்கும் கேரளாவில் உள்ளவர்கள் செல்ல ஆரம்பித்துள்ளனர்.