82 வருட நிறுவனத்தை வாங்கிய முகேஷ் அம்பானி.. மகள் ஈஷா அம்பானி கொடுத்த ஐடியா..!
அந்த வகையில் சர்க்கரையில் வேகவைத்த மிட்டாய்களைத் தயாரிக்கும் 82 வருடமாக இயங்கி வரும் ரவல்கான் என்ற பிரபலமான பிராண்ட் உடன் முக்கியமான ஒப்பந்தம் செய்துள்ளார் முகேஷ் அம்பானி. ரவல்கான் சுகர் ஃபார்ம் லிமிடெட் பங்குச் சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, ரவல்கான் நிறுவனத்தின் டிரேட்மார்க், சமையல் குறிப்புகள் மற்றும் அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளையும் ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்பு நிறுவனம் (RCPL) ரூ.27 கோடிக்கு வாங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
பான் பசந்த் (Pan Pasand) மற்றும் காபி பிரேக் (Coffee Break) போன்ற ஒன்பது மிட்டாய் பிராண்டுகளை ரவல்கான் வைத்திருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கேம்பா குளிர்பான பிராண்டை வாங்கியது போல், மோசமான நிதி நிலையில் இருக்கும் பழைய இந்திய பிராண்டுகளைக் கையகப்படுத்தி அவற்றைப் புதுப்பிக்கும் முயற்சியில் இந்த ரவல்கான் ஒரு பகுதியாக உள்ளது. இதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் குறித்து முதலீட்டாளர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் ரவல்கானின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் ஆகியவை அடங்காது.
இதேபோல் ராவல்கான் நிறுவன பிராண்டுகளில் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் 100% தற்போது ரிலையன்ஸ்-க்கு விற்கப்படும் அறிவுசார் சொத்துக்களுக்கு சொந்தமானது. இதேபோல் ராவல்கான் நிறுவனத்தின் சொத்து, நிலம், ஆலை, கட்டிடம், உபகரணங்கள், இயந்திரங்கள் போன்ற மற்ற அனைத்து சொத்துக்களையும் ராவல்கான் நிர்வாகம் வைத்திருக்கும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் மற்றும் ராவல்கான் மத்தியில் நடந்த ஒப்பந்தத்தில் no-compete clause உள்ளது, இதன் மூலம் இரு நிறுவனமும் வர்த்தகம், உற்பத்தி, நிர்வாகத் தகவல்களைக் கசியவிடக்கூடாது என்பது கட்டாய விதிமுறையாக உள்ளது.