யு 19 ஜூனியர் உலகக்கோப்பை ஃபைனல்… டிவி, ஓடிடியில் பார்ப்பது எப்படி?
U19 எனப்படும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில இறுதிப்போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெறவுள்ளது.
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 1988 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ளது. நடப்பு சாம்பியனாகவும் இந்திய அணி இருப்பது கவனிக்கத்தக்கது.
தற்போது 15 ஆவது உலகக்கோப்பை ஜூனியர் கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரையிறுதி போட்டியில் விளையாட, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன.
நாளை மறுதினம் இறுதிப்போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனியில் உள்ள வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து உலகக்கோப்பையை தவற விட்டது.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் இதற்கு உதய் சஹாரன் தலைமையிலான இந்திய ஜூனியர் அணி பழி தீர்க்குமா என எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
நாளை நடைபெறும் யு19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் பார்த்து மகிழலாம். ஓடிடி தளத்தை பொருத்தளவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் இந்த போட்டியை நேரலையாக வழங்குகிறது.