பாரதி கண்ணம்மா நடிகருடன் லிவிங் டூ கெதரா? பிக்பாஸ் டைட்டில் வின்னர் காதல் கதை
பாரதி கண்ணம்மா நடிகருடன் பிக்பாஸ் அர்ச்சனா சேர்ந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
விஜே அர்ச்சனா
சின்னத்திரையில் “ராஜா ராணி” சீசன் 2 தொடரின் மூலம் பிரபலமானவர் தான் விஜே அர்ச்சனா.
இவர் மீடியாவிற்குள் வந்த ஆரம்ப காலங்களில் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். பின்னர் வாய்ப்பு கிடைக்க நிறைய போட்டோ ஷீட்கள், விளம்பரங்களில் நடிக்க சீரியல் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, ஆல்யாவுடன் இணைந்து ராஜா ராணி 2 சீரியலில் பயங்கரமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
சீரியலில் இருந்து விலகி படத்தில் நடிப்பார் என எதிர்பார்த்த வேளையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வைல்ட் கார்ட்டில் என்றி கொடுத்தார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 19 கோடி வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
இப்படியொரு நிலையில் அர்ச்சனா – பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணுடன் லிவிங் டூ கெதரில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் காணொளிகளும் வைரலாகி வருகின்றன. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தந்தை பேச்சை கேட்டு நடப்பவர் என பல இடங்களில் சுட்டிக் காட்டியிருப்பார்.
எனவே பிரச்சினைகள் இல்லாமல் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் அர்ச்சனா “இந்த செய்தி ஒரு வதந்தி” என்ற மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.