200 அடி உயர வானொலி கோபுரம் திருட்டு., சமூகத்தின் ஒலியை இழந்துவிட்டதாக மக்கள் கவலை
200 அடி உயர Radio Tower திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேடியோ ரிலே ஸ்டேஷனுக்குள் புகுந்த கொள்ளையர்கள், 200 அடி நீளமுள்ள ரேடியோ டவர், டிரான்ஸ்மிட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவின் அலபாமாவின் ஜாஸ்பரில் நடந்துள்ளது.
பிப்ரவரி 2 அன்று, ஜாஸ்பரில் உள்ள நகரின் வானொலி நிலையத்தின் கோபுரத்திற்கு பராமரிப்புக் குழுவினர் வந்தனர்.
ஆனால் 200 அடி நீளமுள்ள ரேடியோ டவர், டிரான்ஸ்மிட்டர் உள்ளிட்ட கருவிகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவத்தை அடுத்து, அப்பகுதி மக்களுக்கு செய்தி மற்றும் பிற தகவல்களை ஒளிபரப்பும் வானொலி ஒலிபரப்புகள் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையில், WJLX வானொலி நிலையத்தின் பொது மேலாளர் Brett Elmore, வானொலி கோபுரம் மற்றும் ஒலிபரப்பு உபகரணங்கள் திருடப்பட்டது குறித்து பதிலளித்தார்.
1950 முதல் ஒலிபரப்பப்படும் தனது வானொலி நிலையத்தின் முழக்கம் ‘the sound of Walker County’ என்று அவர் கூறினார்.
தமது வானொலி நிலையங்கள் செயலிழந்துள்ளதால் தங்களது ஒலியை இழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், வானொலி நிலையத்தை புதுப்பிக்க சுமார் 60,000 முதல் 100,000 டொலர் வரை செலவாகும் என்று நிலைய மேலாளர் பிரட் எல்மோர் தெரிவித்தார்.
gofundme மூலம் நிதி சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. வானொலி நிலையத்தை மீட்டெடுப்பதற்கு உள்ளூர் மக்களும் நிதி உதவி செய்வார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். வெள்ளிக்கிழமை மதியம் வரை சுமார் 1,100 டொலர்கள் திரட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரேடியோ டவர், டிரான்ஸ்மிட்டர் உள்ளிட்ட கருவிகள் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.