நடுவானில் ரத்தம் கக்கி இறந்த ஜேர்மானியர்! அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்
தாய்லாந்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் ஜேர்மன் பயணி ஒருவர், நடுவானில் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Lufthanasa எனும் விமானம் தாய்லாந்தில் இருந்து ஜேர்மனிக்கு புறப்பட்டது. இதில் 63 வயதுடைய ஜேர்மானியர் ஒருவர் தனது மனைவியுடன் பயணித்தார்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, குறித்த ஜேர்மன் பயணிக்கு உடல்பாதிப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவர் ரத்த வாந்தி எடுத்தார்.
அவரது மூக்கில் இருந்தும் ரத்தம் கொட்டியதால் மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட சக பயணிகள் பயத்தில் அலறினர்.
குறித்த நபரின் மனைவியோ கணவரின் நிலையைப் பார்த்து கதறி அழுதார். இதனையடுத்து விமான பணியாளர்கள் சுமார் அரைமணி நேரம் CPR முறையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் அந்நபர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். பின்னர் விமானம் தாய்லாந்துக்கு திருப்பப்பட்டது.
இச்சம்பவத்தால் விமானம் தாய்லாந்தில் எந்த வழிகாட்டுதலும் இன்றி 2 மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இறுதியாக ஜேர்மனிக்கு மற்றொரு விமானத்தில் பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டது.