தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு
தமிழ்நாட்டின் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் பாரதிய ஜனதா கட்சி உரிய கவனம் எடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை இன்று(10) இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கடற்றொழிலாளர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது முன்வைத்துள்ளனர்.
தமிழக கடற்றொழிலாளர்களின் கோரிக்கை
இதன்போது பல மாதங்களாக சிறையில் இருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை நீதிமன்றங்களால் பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்களின் படகுகள் கையளிக்கப்படவில்லை என்று காங்கிரஸின் அகில இந்திய கடற்றொழிலாளர் பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழக கடற்றொழிலாளர்களின் கோரிக்கையை இலங்கை அரசிடம் எடுத்துக் கூறுவதில் மத்திய அரசு தவறிவிட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மெத்தனப் போக்கே பாக்கு வளைகுடாவில் கடற்றொழிலாளர்கள் இலங்கையால் கைது செய்யப்படுவதற்கு ஒரே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கடற்றொழிலாளர் பிரிவு தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.