உக்ரைனுக்கான புதிய இராணுவ தளபதி நியமனம்
உக்ரைனின் புதிய இராணுவத் தளபதியாக கர்னல் ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி (Oleksandr Syrskyi) நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
59 வயதான புதிய இராணுவத் தளபதி இதுவரை ரஷ்ய இராணுவத்தை தோற்கடித்த போர்களில் உக்ரேனிய இராணுவத்திற்கு தலைமை தாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
காலாட்படை பட்டாலியன்கள்
மேலும், இவர் 2019 முதல் உக்ரைனின் காலாட்படை பட்டாலியன்களை வழிநடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை வலேரியா சலுல்ஹந்தா உக்ரேனிய இராணுவத்தின் முன்னாள் தலைவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.