துள்ளி குதித்து உற்சாக கொண்டாட்டம்.. சாம்பியன் கோப்பையுடன் காவ்யா மாறன்.. ட்ரெண்டாகும் வீடியோ!

எஸ்ஏ20 லீக் இறுதிப்போட்டியில் டர்பன் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

எஸ்ஏ20 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களை குவித்தது. ஸ்டப்ஸ் 56 ரன்களும், அபெல் 55 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 42 ரன்களும் விளாசினர்.

இதையடுத்து களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 17 ஓவர்களில் 115 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் கிளாஸன் ஒரேயொரு பந்தை மட்டுமே எதிர்கொண்டு டக் அவுட்டாகி வெளியேறினார். சன்ரைசர்ஸ் அணி தரப்பில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மார்கோ யான்சன் 30 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், டேனியல் மற்றும் பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் நேரில் கண்டு ரசித்தார். பேட்டிங்கின் போது மகிழ்ச்சியாக இருந்த காவ்யா மாறன், சன்ரைசர்ஸ் அணியின் பவுலிங் போது இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இருந்தார். அதிலும் கிளாஸனின் விக்கெட்டை பார்ட்மேன் வீழ்த்திய போது, துள்ளி குதித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்று கொண்டாட்டத்தில் இருந்தது.

சாம்பியன் கோப்பை பெற்றபின் வீரர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காவ்யா மாறன், அந்த கோப்பையை வாங்கி நேராக கேப்டன் மார்க்ரமின் கைகளில் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பின் மார்க்ரம், காவ்யா மாறன் இருவரும் கோப்பையை கைகளில் பிடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஐபிஎல் தொடரின் போது காவ்யா மாறன் சோகத்தில் இருப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்த நிலையில், எஸ்ஏ20 லீக்கில் 2 முறையும் கோப்பையை வென்றுள்ளார் காவ்யா மாறன்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *