குளிர்சாதன பெட்டியை சுவரில் இருந்து எவ்வளவு தூரத்தில் வைக்க வேண்டும்? 99% மக்கள் இந்த தவறை செய்கிறார்கள்!
கோடை அல்லது குளிர்காலமாக இருந்தாலும், ஒவ்வொரு சீசனிலும் குளிர்சாதனப்பெட்டி தேவை. எலெக்ட்ரானிக் பொருட்கள் எதுவாக இருந்தாலும், அவற்றை சரியாக கவனிக்கவில்லை என்றால், அவை நீண்ட காலம் நீடிக்காது. எனவே, குளிர்சாதனப்பெட்டியின் நீண்ட ஆயுளுக்கு சரியான கவனிப்பு முக்கியம். வீட்டில் குளிர்சாதனப்பெட்டி வைத்திருப்பவர்கள் அதை அவ்வப்போது சுத்தம் செய்தாலும் சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. அப்படி, குளிர்சாதனப் பெட்டியை சரியாகப் பராமரிக்காவிட்டால், அது பழுதடைந்து, மின் கட்டணமும் வேகமாக அதிகரிக்கும் என்பதை மிகச் சிலரே அறிவார்கள்.
உங்கள் குளிர்சாதனப்பெட்டிக்கும் சுவருக்கும் இடையில் சிறிது இடைவெளி விடுவது முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியுமா? மிகக் குறைந்த இடவசதி இருந்தால், குளிர்சாதனப் பெட்டி தன்னைத் தானே குளிர்விக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், இது உங்கள் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்து, அதிகப் பணத்தைச் செலவழிக்கும்.
குளிர்சாதன பெட்டியை சுவரில் இருந்து காற்று சுழற்சிக்கு போதுமான தூரத்தில் வைக்க வேண்டும். எந்த இயந்திரத்தையும் திறமையாக இயக்கவும், அதிக வெப்பமடைவதைத் தடுக்கவும், இயந்திரத்தைச் சுற்றி சிறிது இடத்தை விட்டுவிட வேண்டியது அவசியம். இடத்தை மிச்சப்படுத்த உங்கள் குளிர்சாதனப்பெட்டியை சுவரை ஒட்டி வைப்பதை தவிர்க்க முயற்சிக்கவும். அப்படி என்றால், சுவரில் இருந்து குளிர்சாதன பெட்டியை எந்த தூரத்தில் வைத்திருப்பது சரியானது என்ற கேள்விக்கு இதோ பதில்.
பின் சுவரில் இருந்து 2 அங்குல தூரத்திலும், மேல் அலமாரியில் இருந்து 1 அங்குல தூரத்திலும், பக்கவாட்டின் இருபுறமும் குறைந்தது கால் அங்குல தூரத்திலும் குளிர்சாதனப்பெட்டியை வைக்க வேண்டும். இது பொது விதி. ஒவ்வொரு உற்பத்தியாளருக்கும் இந்த அளவீடுகள் மாறும். அதனால், குளிர்சாதன பெட்டி வாங்கும்போது, அதன் கையேட்டை முழுமையாக படிக்க வேண்டியது அவசியம்.