அடுத்த படம் ஹிட்டானால் தயாரிப்பாளர் ஹீரோக்கு இந்த காரை தான் கிஃப்ட் குடுப்பாங்க! எப்படி இதுல என்ன இருக்குது!
கியா நிறுவனத்தின் இவி9 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாக போவது உறுதியாகியுள்ள நிலையில் தற்போது இந்த கார் குறித்த விலை விபரங்கள் நமக்கு தெரியவந்துள்ளது. இதன்படி இந்த கார் ரூபாய் ஒரு கோடி என்ற நிலையில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ1 கோடி என்ற அளவில் இந்த காருக்கு விலை கொடுத்து வாங்க அப்படி அதில் என்ன இருக்கிறது என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் அதிக சொகுசு நிறைந்த கார்களின் விற்பனை சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்தியா அளவில் பணக்காரர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகமாகி வரும் நிலையில் கோடி ரூபாய் மதிப்பில் உள்ள கார்களின் விற்பனையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இப்படியாக பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் அதிக விலை கொண்ட கார்களை விற்பனை செய்துவரும் நிலையில் தற்போது கியா நிறுவனமும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.
கியா நிறுவனத்தின் இவி 9 என்ற எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு வரவுள்ளது. இந்தியாவிற்கு இந்த கார் வரும்போது ரூபாய் ஒரு கோடி என்ற நிலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . கியா இவி 6 காரை பொருத்தவரை ரூபாய் 65 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வரும் நிலையில் தற்போது இவி 9 கார் ஒரு கோடி ரூபாய்க்கு விலைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
கியா நிறுவனத்தின் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் சொகுசு எஸ்யூவி காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் நீளமே ஐந்து மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வீல் பேஸ் மட்டுமே 3100 மிமீ கொண்டதாக இருக்கிறது. இந்த காரின் உட்புற சீட்டர் என்பது 6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களுடன் வடிவமைக்கப்படுகிறது. மொத்தம் மூன்று டன் எடை கொண்ட அளவில் இந்த காரின் எடை இருக்கிறது.
இந்த கார் இ-ஜிஎம்பி பிளாட்ஃபார்மில் உருவாக அமைப்பாக இருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்ஃபார்மில் தான் இவி6 காரில் உருவாக்கப்பட்டது. இது ஃபிளக்ஸிபிலிட்டியான பிளாட்ஃபார்ம் இதனால் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தேவையான படி இதை வடிவமைத்துக் கொள்ள முடியும். முன்பக்கம் டிஜிட்டல் பேட்டர்ன் பிளாஷ்டோர் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கம் எல்இடிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 2சன்ரூஃப்கள் இருக்கிறது. இந்த காரின் டாப் வேரியன்டில் இரண்டாம் வரிசை சீட்டில் மசாஜ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரின் பேஸிக் மாடலில் 19 இன்ச் வீல் பொருத்தப்பட்டுள்ளது. டாப் வேரியண்டில் 21 இன்ச் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் பேட்டரி ஆப்ஷனை பொறுத்தவரை டாப் வேரியண்டில் 99.8 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. 76.1 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் ஒரு தடவை சார்ஜ் செய்தால் 505 கிலோமீட்டர் வரைந்து தரும்.
இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது ஒரு கோடி என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்கெட்டில் உள்ள பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் காருக்கு போட்டியாக இந்த கார் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் அளவு, இருக்கும் இடம், ரேஞ்ச், ஆகியவற்றை கணக்கிட்டால் இந்த கார் தான் டாப் இடத்தில் இருக்கும். போட்டி நிறுவனங்களுக்கு இந்த கார் ஒரு கலக்கத்தை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
ரூபாய் ஒரு கோடிக்கு மேல் விலை இருப்பதால் இந்த காரின் விற்பனை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இல்லாவிட்டாலும் மிகப்பெரிய பணக்கார குடும்பங்கள் தங்கள் குடும்பத்துடன் ஒரு இடத்திற்கு செல்ல இந்த கார் வசதியாக இருக்கும் என்பதால் இந்த காரை தேர்வு செய்ய தயங்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மிகப்பெரிய பணக்காரர்கள் சினிமா நடிகர்கள் நடிகைகள் உள்ளிட்ட பலர் இந்த காரை வாங்ககூடும்.
தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படம் ஹிட்டானால் அதன் தயாரிப்பாளர் அதன் நடிகருக்கு கார் பரிசாக வழங்குவது என்பது டிரெண்டாகி வருகிறது. அந்த டிரெண்டில் தற்போது இந்த கார் வெளியான பின்பு இந்த காரும் பரிசாக வழங்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் இந்த காரில் உள்ள வசதிகள் எல்லாம் நடிகர் நடிகைகளுக்கு தேவையான வசதிகளாக உள்ளது. அவர்களுக்கு ஏற்ற காராக உள்ளது.