டொயோட்டா கார்கள் மட்டும் எப்படி மாடு போல ஒழைக்குது! 8 லட்சம், 10 லட்சம் கி.மீட்டர்னு ஓட இதுதான் காரணமா!
நீடித்து உழைக்கும் திறனுக்கு பெயர்போன வாகனங்களாக டொயோட்டா (Toyota)வின் அனைத்து தயாரிப்புகளும் இருக்கின்றன. மேலும், உதாரணமாக நாட்டில் ஏகப்பட்ட டொயோட்டா கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. சமீபத்தில்கூட டொயோட்டாவின் பிரபல தயாரிப்புகளில் ஒன்றான குவாலிஸ் 8 லட்சம் கிமீட்டரையும் கடந்து இப்போதும் மிக சூப்பராக இயங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
கேரளாவிலேயே அந்த குவாலிஸ் கார் இருக்கின்றது. இதேபோல், டொயோட்டாவின் மற்றுமொரு புகழ்பெற்ற தயாரிப்பான இன்னோவா 10 லட்சம் கிமீட்டரைக் கடந்து இப்போதும் மிக சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. வழக்கமான சர்வீஸ் செய்தே இத்தனை லட்சம் கிமீ டிராவலை அதன் உரிமையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற நிகழ்வகள் இந்தியாவில் மட்டும் அல்ல உலக நாடுகள் சிலவற்றிலும் அரங்கேறி இருக்கின்றன. இதனால்தான் உலக அளவில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்தியாவில் மிக சிறப்பான ரீ-செல்லிங் மதிப்பு இந்த காருக்கு வழங்கப்படுகின்றது.
அதாவது, யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் இந்த காருக்கு நல்ல மதிப்பு நிலவுகின்றது. இதற்கு அந்த காரின் நீடித்து உழைக்கும் திறனே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே டொயோட்டாவின் தயாரிப்புகள் மட்டும் எப்படி நீடித்து உழைக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன என்கிற சந்தேகமும், கேள்வியும் உங்களுக்கு எழும்பி இருக்கும்.
இது ஓர் ஜப்பானிய வார்த்தை ஆகும். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ‘மனித தொடுதலுடன் தானியங்கி’ என்பதே அர்த்தம். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகன உற்பத்தியில் அதிகப்படியான மெஷின்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால், டொயோட்டா இந்த விஷயத்தில் கொஞ்சம் வித்தியாசம்.
இவர்கள் மெஷின்களின் தலையீட்டை குறைத்துவிட்டு அதற்கு பதிலாக அதிக மனித தலையீட்டை பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக இதன் எஞ்ஜினியர்களே அவர்களின் கைகளால் எஞ்சினை கட்டமைக்கின்றனர். இதனால் கூடுதல் கச்சிதத்தை எஞ்சின் உற்பத்தியில் டொயோட்டா பெறுகின்றது. இதற்கு பின்னரே அது ஆட்டோமேட்டிக் செயலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
டொயோட்டா இவ்வாறு செய்வதனாலேயே அது அதன் எஞ்சின் விஷயத்தில் அதிக தேர்வை வழங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இவர்கள் எஞ்சின் தயாரிப்பில் அதிக முயற்சியை வழங்குவதாலேயே பல மாடல்களில் ஒரே பாகங்களைக் கொண்ட எஞ்சினை பயன்படுத்தவும் செய்கின்றனர். ஜிடோகாவை போல இன்னும் ஒரு தாரக மந்திரத்தையும் டொயோட்டா அதன் கார் உற்பத்தியில் கையாள்கின்றது.
அது கைசன் ஆகும். இந்த ஜப்பானிய வார்த்தைக்கு அர்த்தம் ‘நல்ல மாற்றம்’ ஆகும். நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர், அவரால் தொடர்ந்து வேலையை செய்ய முடியாத அளவிற்கு ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால் உடனடியாக அவரால் அந்த உற்பத்தியையே நிறுத்த முடியும். ஆகையால், டொயோட்டாவின் தயாரிப்புகளில் உற்பத்தி கோளாறு என்பது மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டு இருக்கின்றது.
இதனாலேயே அது மற்ற நிறுவனங்களை போல அதிக ரீ-காலை அதன் வாடிக்கையாளர்களுக்கு விடுப்பதில்லை. மேலும், ஒவ்வொரு வாகனமும் உற்பத்தி செய்து விற்பனைக்கு வெளியேற்றப்படும் முன் கடுமையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றது. ஆகையால், பாதிப்புள்ள தயாரிப்புகள் வாடிக்கையாளர்களின் கைகளுக்குப் போவது மிகப் பெரிய தவிர்க்கப்படுகின்றது.
இதுமாதிரியான நடவடிக்கைகளினாலேயே டொயோட்டாவின் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக நம்பிக்கைத் தன்மை மற்றும் உறுதித் தன்மைக் கொண்டவையாக இருக்கின்றது. இதேபோல், எஞ்சின்கள் நீடித்து உழைக்க வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே காரின் எஞ்சின் வெளியேற்றும் ஆர்பிஎம் திறன் குறைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், லட்சக் கணக்கான கிமீட்டர்கள் எஞ்சின்கள் இயங்க வேண்டும் என்பதற்காக எஞ்சின் உதிரி பாகங்கள் மிகைப்படுத்தப்பட்டு உள்ளன.