எஸ்பிஐ vs எச்டிஎஃப்சி vs ஐசிஐசிஐ… ரெக்கரிங் டெபாசிட்டிற்கு வட்டி விகிதங்கள் என்ன..?
ஃபிக்சட் டெபாசிட்டை (FD) போல ரெக்கரிங் டெபாசிட் (RD) கால அளவு மற்றும் டெபாசிட் செய்பவரின் வயதின் அடிப்படையில் பல்வேறு விதமான வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஒருவேளை நீங்கள் சீனியர் சிட்டிசனாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படும். ஃபிக்சட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட்டிற்கான வட்டி விகிதங்கள் கிட்டதட்ட ஒரே மாதிரியாக தான் இருக்கும். வழக்கமாக இரண்டுமே சீனியர் சிட்டிசன்களுக்கு 50 பேசஸ் பாயிண்டுகள் (bps) அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
SBI ரெக்கரிங் டெபாசிட் (RD) சமீபத்திய வட்டி விகிதங்கள்:
SBI பொதுவான டெபாசிட்டர்களுக்கு 6.50% முதல் 7% வரையிலான வட்டி விகிதங்களை ரெக்கரிங் டெபாசிட்களுக்கு கொடுக்கிறது. இதுவே சீனியர் சிட்டிசன்களுக்கு 7.35% முதல் 7.5% வரை வழங்குகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 100 ரூபாய் என்ற குறைந்தப்பட்ச முதலீடு மூலமாக ஒருவர் ரெக்கரிங் டெபாசிட் அக்கவுண்டை திறக்கலாம். SBI RD -க்கான கால அளவு 1 வருடம் முதல் 10 வருடங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதங்கள் டிசம்பர் 27, 2023 முதல் அமலானது.
HDFC ரெக்கரிங் டெபாசிட் (RD) சமீபத்திய வட்டி விகிதங்கள்:
HDFC வங்கியில் ரெக்கரிங் டெபாசிட்டிற்கான வட்டி விகிதங்கள் ஒரு ஆண்டுக்கு சாதாரண சிட்டிசன்களுக்கு 4.50% முதல் 7% வரையிலும், சீனியர் சிட்டிசன்களுக்கு 5% முதல் 7.75% வரையிலும் உள்ளது. ஒருவர் 1000 ரூபாய் குறைந்தப்பட்ச டெபாசிட் செய்வதன் மூலமாக HDFC ரெக்கரிங் டெபாசிட் அக்கவுண்ட்டை திறக்கலாம். இதற்கான கால அளவு 6 மாதங்கள் முதல் 10 வருடங்கள் வரை உள்ளது. இந்த வட்டி விகிதங்கள் ஜனவரி 24, 2023 முதல் அமலுக்கு வந்தது.
ICICI வங்கி ரெக்கரிங் டெபாசிட் (RD) சமீபத்திய வட்டி விகிதங்கள்:
ICICI இரண்டு விதமான ரெக்கரிங் டெபாசிட்களை வழங்குகிறது, அதாவது வழக்கமான சிட்டிசன்களுக்கான RD -க்கு 4.75 % முதல் 7.10%, வரை வட்டி விகிதம் வழங்குகிறது மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கான RD -க்கு 5.25% முதல் 7.60% வரையிலான வட்டி விகிதங்களை கொடுக்கிறது. இதற்கான முதலீட்டு கால அளவு 6 மாதங்கள் முதல் 10 வருடங்கள் வரை உள்ளது. மேலும் குறைந்தப்பட்ச முதலீட்டு தொகை ₹500. இந்த வட்டி விகிதங்கள் பிப்ரவரி 24, 2023 முதல் அமலானது.