அயோத்தி ராமரை தரிசிக்க சென்றார் யோகி ஆதித்ய நாத்..!
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்துடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள், புதிதாக பிரதிஷ்டை செய்த ராமரை தரிசிக்க அயோத்தி சென்றனர்.
அயோத்தியில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்றது. அதன் பிறகு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
அந்த வகையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் சபாநாயகர் சதீஷ் மஹானா, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகளும் ஒன்றாக சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது வழிநெடுக்கிலும் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பினர்.
மக்கள் பிரதிநிதிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்ததால், லக்னோ-அயோத்தி தேசிய நெடுஞ்சாலை பரபரத்தது.
இந்த அயோத்தி பயணத்தை காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் புறக்கணித்த நிலையில், இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பாஜக, பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.