குடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும் இந்த 5 உணவுகளை தவறி கூட தொடாதீங்க.. மருத்துவரின் ஆலோசனை..!
உங்கள் உடல் நலத்தின் அடித்தளம் என்று கருதப்படும் குடல் ஆரோக்கியம், உணவு செரிமானத்தில் மட்டுமல்லாமல் உடலின் ஒவ்வொரு உறுப்பு அமைப்புகளின் செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவை செரிமானம் செய்து, அதிலிருந்து அவசியமான ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதன் மூலம், முழு உடலையும் ஊக்குவிக்கிறது. எனவே, இன்றைய மருத்துவ உலகில் குடல் ஆரோகியத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
உங்கள் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஐந்து முக்கிய உணவுகளை குறித்தும், உங்கள் உணவு மற்றும் மரபணுவின் இடையேயான தொடர்பை பற்றியும் மரபணுத்தொகையியல் நிபுணர் தீபிகா சுரேஷ் விளக்கியுள்ளார். அதுகுறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
உங்கள் குடல் ஆரோக்கியத்தை அழிக்கும் 5 உணவுகள்**:**
வெள்ளை சர்க்கரை**:**
சாக்லேட்டுகள், குக்கீகள் மற்றும் கேக்குகள் பெரும்பாலான மக்களின் விருப்பமான தின்பண்டங்கள். ஆனால், அதிக அளவில் சர்க்கரை உண்ணுதல் நல்ல குடல் பாக்டீரியாக்களை அழித்து, உடலில் அழற்சியை உண்டாக்கி, பெரிய ஆரோக்கிய பிரச்னைகளுக்கு வழிவகுகிறது.
சிவப்பு இறைச்சி**:**
சிவப்பு இறைச்சி அதாவது ஆடு, மாடு போன்ற பாலூட்டிகளின் இறச்சியை அடிக்கடி உண்ணுதல் இதய நோய்க்கு ஆபத்து என்று நீண்ட காலமாக கூறப்படுகிறது. குடல் பாக்டீரியாக்கள் இதில் ஒரு பங்கு வகிக்கின்றன என்று புதிய ஆதாரங்கள் காட்டுகின்றன. சிவப்பு இறைச்சி குடல் பாக்டீரியாக்களை சில பொருட்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கிறது, அவை இதய நோய்க்கு ஆனா ஆபத்தை அதிகரிக்கிறது .
பொரித்த உணவுகள்**:**
இது பலருக்கும் ஆச்சரியமான விஷயம் அல்ல, ஏனெனில் பொரித்த உணவுகள் ஏற்கனவே பலரின் “தவிர்க்க வேண்டிய உணவுகள்” பட்டியலில் உள்ளன. தீய கொழுப்புகளில் (கொழுப்பு மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள்) ஊறிய இந்த உணவுகள் வயிற்றை எரிச்சலடைய செய்யலாம், வலி, வயிற்றுப்போக்கு, மற்றும் வாயுவை உண்டாக்கலாம். மேலும், பொரித்த உணவுகளை அதிகமாக உண்ணுதல் தீய குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்கள்**:**
வெள்ளை மாவு, வெள்ளை ரொட்டி, பாஸ்தா மற்றும் பேஸ்ட்ரிகள் ஆகியவை சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்களின் சில உதாரணங்கள். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட் உணவுகளை அதிகமாக உட்கொள்ளும்போது அது தீய பாக்டீரியாக்களுக்கு தீனியாக அமைந்து தீய பாக்டீரியாக்கள் எண்ணிக்கையை அதிகரித்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடும். தானியங்கள், பருப்புகள், மற்றும் காய்கறிகள் போன்ற முழு கார்போஹைட்ரேட்களுடன் அவற்றை மாற்றுவது உங்கள் குடலை மகிழ்ச்சியாக்கலாம்.
காஃபின்**:**
காபி பலரின் காலை நேர வழக்கங்களில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த அளவு அல்லது மிதமான அளவில் எடுத்துகொள்ளுதல் சரி என்றும் பலனளிக்கும் என்றும் கூறப்படுகிறது, ஆனால் ஒரு நாளைக்கு அதிகமான கோப்பைகள் எடுத்துகொண்டால் சில செரிமான சிக்கல்களை போன்று அமில பின்னோக்கு அல்லது ஐபிஎஸ் போன்றவற்றை மோசமாக்கலாம். உங்கள் காபியில் அதிக அளவில் சர்க்கரை சேர்த்தல் நல்ல குடல் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை குறைக்கலாம்.
குடல் ஆரோக்கியத்தில் டிஎன்ஏ :
உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதன் இயல்பான நிலைக்கு மீட்டமைக்க உணவில் சில மாற்றங்களை செய்வது மட்டும் போதாது. உங்கள் உணவை உங்கள் மூலதனத்துடன் ஒத்துழைக்க அமைக்கும் ஒரு உணவு அமைப்பாகும், அதாவது உங்கள் டிஎன்ஏ. இது உங்கள் மரபணு வரைபடத்துக்கும் உங்கள் உணவுக்கும் இடையிலான பாலமாக செயல்படும் ஊட்டச்சத்து மரபியல் மூலம் அமைக்கப்படுகிறது. நீங்கள் உண்ணும் உணவு உங்கள் மரபணுக்களுடன் எவ்வாறு பேசுகிறது என்பதை புரிந்துகொள்வது உங்கள் உடல் வெவ்வேறு ஊட்டச்சத்துகளை எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை அறிய உதவுகிறது, இது உங்கள் மரபணு அமைப்பிற்கு ஒத்துப்போகும் உணவு தேர்வுகளை செய்வதற்கு உதவுகிறது.
உதாரணமாக, நல்ல குடல் சுழற்சியை பராமரிக்க முக்கிய வேலையாற்றும் B வைட்டமின்களை பற்றி சிந்திக்கவும். ஊட்டச்சத்து மரபியல் உங்கள் தனிப்பட்ட மரபணு மாறுபாடுகள் இந்த வைட்டமின்களை உறிஞ்சுவதில் மற்றும் பயன்படுத்துவதில் உங்கள் உடலின் திறனை எப்படி பாதிக்கும் என்று வெளிப்படுத்தலாம். சில நபர்களுக்கு B வைட்டமின் பற்றாக்குறைகளுக்கு மரபணு மாறுபாடுகள் இருக்கலாம், இது குடலின் மைக்ரோபியல் சமநிலையை கெடுத்து, சிக்கல்களை ஏற்படுத்தலாம். உங்கள் மரபணு விவரத்திற்கு ஏற்றவாறு சரியான அளவு B வைட்டமின்களை உள்ளடக்கிய உணவை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம், நீங்கள் உங்கள் குடல் நுண்ணுயிர்கட்டை (மைக்ரோபியலை) மேம்படுத்தலாம் .
மேலும், ஊட்டச்சத்து மரபியல், இன்ஃப்லமட்டரி குடல் நோய்கள் போன்ற குடல் சம்பந்தப்பட்ட நிலைகளை தடுப்பதிலும் மேலாண்மை செய்வதிலும் ஒரு தெளிவை தருகிறது . இது உங்கள் மரபணு விவரத்தின் மூலம் கொழுப்புகளின் செயல்பாட்டை எவ்வாறு பாதிக்கும் என்று ஆராய்கிறது, உங்கள் உணவில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களின் சமநிலையை வழிநடத்துகிறது. இந்த சமநிலை முக்கியமாகும்; உங்கள் மரபணு முன்னோக்கியில் உள்ள உணவை அமைப்பது குடல் அழற்சியை குறைக்கும் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நிலைகள் உருவாகும் ஆபத்தைக் குறைக்கும்.