உங்க குழந்தைக்கு இந்த 5 அறிகுறிகள் இருக்கா..? மாரடைப்பா கூட இருக்கலாம்..!
குளிர் காலங்களில் வயதில் பெரியவர்களை மாரடைப்பு தாக்கும் ஆபத்து அதிகமுள்ளது. குளிர்ச்சியான வெப்பநிலை காரணமாக வயதானவர்கள் மற்றும் இணை நோயுள்ளவர்கள் இந்த சமயங்களில் இதய நோயினால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
சமீப ஆண்டுகளாக இளம் வயதினரை மாரடைப்பு தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழ மோசமான வாழ்க்கை முறை தான் முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் சமீபத்தில் 5 வயது சிறுமி மாரடைப்பால் இறந்துபோனது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த காமினி என்ற ஐந்து வயது சிறுமி, தன் தாயின் அருகில் படுத்து மொபைல் போனில் கார்டூன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மயக்கடைந்துள்ளார். சிறுமியின் கையிலிருந்து போன் கீழே விழுந்த பிறகே தாய் பார்த்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமணை அழைத்துச் சென்ற நிலையில், வரும் வழியிலேயே சிறுமி இறந்துவிட்டதாகவும் மாரடைப்புதான் இதற்கு காரணமாக இருக்க கூடும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சிறுமி உண்மையிலேயே மாரடைப்பினால் இறந்தாரா அல்லது வேறு காரணங்களா எனத் தெரிந்துகொள்ள பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அதற்கு சிறுமியின் உடலை ஒப்படைக்குமாறு பெற்றோர்களிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை எனக் கூறுகிறார் அம்ரோஹா தலைமை மருத்துவ அதிகாரி சத்யபால் சிங். இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் இதேப்போல் மாரடைப்பினால் பல சிறுவர்களும் இள வயதினரும் இறந்து போயுள்ளனர்.
சிறுவர்களிடத்தில் மார்டைப்பிற்கான அறிகுறிகள்:
1. திடீர் மயக்கம்
2. அதிக சோர்வு
3. நெஞ்சுப் பகுதியில் அசௌகர்யமாக உணர்தல்
4. சீரற்ற சுவாசம்
5. படபடப்பு
ஒழுங்கற்ற இதயத்துடிப்பு (Arrhythmias) : புதிதாக பிறந்த குழந்தைக்கு கூட Arrhythmias ஏற்படலாம். இதயம் திடீரென்று வேகமாகவோ அல்லது மெதுவாகவோ துடிப்பதையே Arrhythmias என அழைக்கபடுகிறது. சில சமயங்களில் அதுவாகவே சீரானாலும், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
மாரடைப்பு வராமல் தடுக்க 5 டிப்ஸ்
1. ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்தபடியே இருக்க கூடாது. சீரான உடற்பயிற்சியில் பழக்கத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். ஆரோக்கியமான மெடபாலிஸத்தை அவர்களிடத்தில் பரமரிக்க பெற்றோர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறையை அவர்கள் பின்பற்றினால் அதிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும்.
2. சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற வலியுறுத்துங்கள். குழந்தைகளின் டயட்டில் புரதங்கள், நார்ச்சத்து, தாதுக்கள் போன்றவை சரிவிகிதத்தில் கலந்திருக்க வேண்டும்.
3. தினமும் உடலுக்கு தேவையான நீரை பருக வைக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால் நச்சுக்கள் வெளியேறுவதோடு சிறுநீரகம், கல்லீரல் முறையாக செயல்படும்.
4. இரவில் மொபைல் போன் அதிகம் பயன்படுதினால் அதனை குறைக்க அறிவுறுத்துங்கள். இது கண்களுக்கு மட்டுமின்று ஒட்டுமொத்த உடல்நலனுக்கும் நல்லது.
5. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேப்போல் அவர்களின் மனநலனை ஆரோக்கியமாக பேண வேண்டும்.