நீங்க ஞாயிற்றுக்கிழமை பிறந்தவரா? இதோ உங்களுக்கான பலன்கள்..!
நியூமராலஜி என்பது ஒரு எண்ணுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு அல்லது உறவின் நம்பிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
நியூமராலஜியானது பல மக்களுக்கு பதவி உயர்வு, தொழிலில் வெற்றி, இனிமையான காதல் வாழ்க்கை என பல நன்மைகளை பற்றி தெளிவுப்படுத்தும். வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட 1- 9 நம்பர்களை அடிப்படையாக கொண்டது எண் கணிதம். வெவ்வேறு எண்களை கொண்ட இரு நபர்களுக்கு இடையிலான உறவில் பொருந்த கூடிய தன்மையை கணக்கிடவும் எண் கணிதம் உதவுகிறது. எண்களின் அடிப்படையில் காதல் அல்லது உறவு இணக்கத்தன்மை கணக்கிடப்படுகிறது. இதனிடையே மிகவும் சக்தி நிறைந்த நாளான ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்களுக்கு, நியூமராலஜி அடிப்படையிலான பலன்களை இங்கே பார்க்கலாம்…
ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்களுக்கு நம்பர் 1 மிகவும் அதிர்ஷ்டமானது. மேலும் நியூமராலஜியின்படி, எண் 1 சூரியனின் ஆற்றலை பெறுகிறது.
இவர்களுக்கு அதிர்ஷ்டமான நிறங்கள்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்கள்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட உலோகம்: தங்கம்
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
வலுவான விஷயங்கள் மற்றும் குணங்கள்
சூரியனின் ஆற்றல் நிறைந்த நாளான ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் நியூமராலஜி-யின்படி, பொதுவாக சுதந்திரத்தை விரும்புபவர்களாகவும், திட்டமிடுவதில் சிறந்தவர்களாகவும், தங்களுக்கென ஒரு வலுவான அடையாளத்தை வைத்திருப்பவர்களாகவும், தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும், கலைத்திறன், தலைமைத்துவம், புத்திசாலியாகவும், பிராக்டிகலாக சிந்தித்து முடிவெடுப்பவர்களாகவும், நாட்டை நேசிப்பவர்களாகவும், உறுதி மற்றும் நம்பிக்கை உள்ளவர்களாகவும், பிறருக்கு மனப்பூர்வமாக உதவுபவர்களாகவும், திறமையானவர்களாகவும், உறவுகளில் நம்பகமானவர்களாகவும், பொழுதுபோக்காளர்கள், தைரியமான முடிவுகளை எடுக்க துணிச்சல் கொண்டவர்களாகவும், பிறரை எளிதில் ஈர்க்க கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்கின்றனர் நியூமரலாஜி நிபுணர்கள்.
பொதுவான இயல்பு
இவர்களின் மனதில் அடிக்கடி விந்தையான சிந்தனை உதிக்கும். இவர்களிடம் இருக்கும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை சில நேரங்களில் உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தும். உள்ளார்ந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள இயலாமல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் போராடுவார்கள்.
சாதகமான தொழில்
சோலார் பொருட்கள் உற்பத்தி மற்றும் டீலர்ஷிப், ப்ரோக்கர் பிசினஸ், தியேட்டர் ஆக்டர்ஸ், டெக்கினிக்கல் சப்போர்ட்ஸ், லேண்ட் டீலர், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு, ஸ்போர்ட்ஸ், பாதுகாப்பு அல்லது விமான படை பணிகள், அரசியல், துணி உற்பத்தி அல்லது ஆடை விற்பனை, சட்டம், ஏற்றுமதி/இறக்குமதி ஏஜென்ட், மேன்பவர் கன்சல்டன்சிஸ், உணவு தொழில் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் லாபகரமாக இருக்கும்.
அறிவுரை
தினமும் காலை நேரத்தில் சூரிய பகவானுக்கு தண்ணீர் வைத்து வழிபடுங்கள். தொழிலை விரைவுபடுத்த துவக்கத்தில் சார்ந்து இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நன்கொடைகள்
ஆசிரமங்கள் அல்லது கோவிலில் மஞ்சள் அரிசி தானம் செய்யுங்கள்