முடிவுக்கு வரும் ஸ்ரேயாஸ் ஐயர் கிரிக்கெட் வாழ்க்கை.. ஆப்பு வைத்த அஜித் அகர்கர்.. இனி ஐபிஎல் மட்டுமே!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார். சொந்த மண்ணில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் சேர்த்து 104 ரன்களை மட்டுமே ஸ்ரேயாஸ் ஐயர் சேர்த்தார். அதற்கு முன் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் 4 இன்னிங்ஸ்களில் வெறும் 41 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸ்களில் 42 ரன்களை மட்டுமே சேர்த்தார். கடைசியாக ஆடிய 12 இன்னிங்ஸ்களில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருமுறை அரைசதம் அடிக்கவில்லை. நல்ல தொடக்கம் கிடைத்தும் அட்டாக் செய்கிறேன் என்ற பெயரில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை எளிதாக தாரை வார்த்து செல்கிறார்.
இதுமட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறுவதும் மற்றொரு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நடப்பாண்டில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது. அதில் இலங்கை அணிக்கு எதிரான விளையாட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் ஸ்ரேயாஸ் ஐயர் திணறி வரும் சூழலில், தற்போது டெஸ்ட் அணியிலும் இடத்தை பறிகொடுத்துள்ளார். நேற்று இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியதாக கூறப்பட்டது. ஆனால் தேர்வு குழுவினர் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கியதும் பின்னர் உறுதி செய்யப்பட்டது.
நடப்பாண்டில் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டுமே பிசிசிஐ முடிவெடுத்துள்ள நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் இனி ஒருநாள் கிரிக்கெட் அணியில் மட்டுமே இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. அவரது இடத்தில் களமிறங்க ரஜத் பட்டிதர், சர்பராஸ் கான் ஆகியோர் இருக்கின்றனர். அதேபோல் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்தால் கேஎல் ராகுல் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தை எளிதாக நிரப்ப முடியும். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் இனி ஐபிஎல் தொடரில் மட்டுமே களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.