சச்சின், கங்குலி ஜோடி சேர்ந்து 249 ரன்கள்..சிக்சர்களை பறக்கவிட்ட கங்குலி..இந்தியா அபாரமாக வென்ற கதை
லீட்ஸ்: இந்த டெஸ்டில் மொத்தம் நான்கு சதங்கள்.இரண்டு டீம்களின் கேப்டன்களும், சதம் எடுத்தனர்.மொத்தம் மூன்று இன்னிங்ஸ்களே பேட்டிங் விளையாடப்பட்டன.7 LBW முறையில் அவுட் ஆகினர்.ஒரு இன்னிங்சில் உபரி ரன்கள் 50 ( 18 நோ பால்கள் உள்பட )
மொத்தம் 7 சிக்ஸர்கள்.ஒரு ஸ்பின் பவுலர் மொத்தம் வீழ்த்திய விக்கெட்டுக்கள் 7.
ஒரு டீமின் 4 பவுலர்கள் தலா 100 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர், தங்கள் பவுலிங்கில்.இந்திய டீமின் கேப்டன் சௌரவ் கங்குலி, டாஸ் வெற்றி அடைந்து, முதலில் பேட்டிங் ஆட தேர்வு செய்தார். இந்திய டீம் இரண்டு நாட்கள் முழுவதும் பேட்டிங் ஆடி, மூன்றாம் நாளன்று எட்டு விக்கெட்டுக்கள் இழப்பிற்கு, டிக்ளர் செய்தனர். ரன்கள் 628.
முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் 236/2.இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் 584/4
இந்திய டீமின்
பவுண்டரிகள் 72
சிக்ஸர்கள் 6
ரன்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன.
சச்சின் டெண்டுல்கர் 193 ( 19 x 4 & 3 x 6 ) ( 330 பந்துக்கள் )
ராகுல் திராவிட் 148
( 23 x 4 ) (307 பந்துக்கள்)
சௌரவ் கங்குலி 128
( 14 x 4 & 3 x 6 )
( 167 பந்துக்கள்)
சஞ்சய் பங்கர் 68 (10 x 4) (236 பந்துக்கள்)
இங்கிலாந்து டீம் பவுலிங்
ஆண்டி கட்டிக் 3 – 150
அலெஸ் துடோர் 2 – 146
அஷ்லே கிளேஸ் 1 – 135
மாத் யூ ஹோகர்ட் 1 – 102
அன்ட்ரு
பிளின்ட் அப் 1 – 68
சஞ்சய் பங்கர், ராகுல் திராவிட் ஜோடி 170 ரன்கள் குவித்தனர்.ராகுல் திராவிட் ,சச்சின் டெண்டுல்கர் ஜோடி 150 ரன்கள் குவித்தனர்.சச்சின் டெண்டுல்கர்,
சௌரவ் கங்குலி ஜோடி 249 ரன்கள் குவித்தனர்.இங்கிலாந்து டீமின் முதல் இன்னிங்சில் அலெக் ஸ்டெவார்ட் அதிக பட்சமாக 78 ரன்கள் எடுத்தார்
( 11 x 4) ( 120 பந்துக்கள் )
மைக்கேல் வஹான் 61 ( 9 x 4) (116 பந்துக்கள்)இங்கிலாந்து டீம் மூன்றாம் நாள் ஆட்ட முடிவிற்குள் 9 விக்கெட்டுக்களை இழந்து, 264 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்திய டீமின் பவுலர்கள் சிறப்பாக பந்துக்கள் வீசினார்கள்.
ஓபனிங் ஜோடி 21 ஓவர்கள் தாக்கு பிடித்து விளையாடினர்.