Multibagger: இந்த பங்கில் ரூ.10,000 முதலீடு செஞ்சிருந்தா இப்போ ரூ.5 லட்சமாகி இருக்கும்.. தெரியுமா?
அண்மை காலமாக இந்திய பங்குச்சந்தைகளில் சிறு நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன. இதனால் சில்லறை முதலீட்டாளர்களும் கூட ஸ்மால் கேப் பங்குகளை தேடி தேடி முதலீடு செய்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனம் (Gensol Engineering) முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரி இறைத்துள்ளது.
சோலார் மின் உற்பத்தி நிலையங்களுக்கான கட்டுமானம், பொறியியல் சேவைகள் மற்றும் கொள்முதல் சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் ஜென்சால் இன்ஜினியரிங். அதுமட்டுமின்றி மின்சார வாகனங்கள் உற்பத்தியும் களமிறங்கியுள்ளது.
இந்நிறுவனம் சந்தையில் பட்டியலிடப்பட்டதில் இருந்து தற்போது வரை 5,200% லாபத்தை பெற்று தந்துள்ளது. அதாவது 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது ரூ.5 லட்சமாகி இருக்கும்.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது எப்போது?: ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஓ வெளியிட்டது. அப்போது ஒரு பங்கின் விலை ரூ.83 தான். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளில் இந்த பங்கின் விலையானது 1,111.95 ரூபாய் என உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த பங்கின் விலை 210 ரூபாய் அதாவது 23.62% அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் கணக்கிட்டால் ஒரு பங்கின் மதிப்பு 792 ரூபாய் உயர்ந்துள்ளது. சதவிகிதத்தில் பார்த்தால் 248.91% ஆகும்.
பங்குகள் விவரம்: ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனத்தை பொறுத்தவரை சந்தை மூலதனமானது 4,204ஆக உள்ளது. இந்நிறுவனத்தின் வருவாய் 2022இல் 162 கோடி ரூபாயாக இருந்து 2023இல் 397 கோடி என அதிகரித்துள்ளது.
லாபமும் ஓராண்டிலேயே 11 கோடி ரூபாயில் இருந்து 25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பங்குகளை பொறுத்தவரை புரமோட்டர்களே 62.59% பங்குகளை கொண்டுள்ளனர். சில்லறை முதலீட்டாளர்கள் வசம் 34.47% பங்குகளும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வசம் 2.94% பங்குகளும் உள்ளன.
அண்மையில் ரூ.900 கோடி நிதி திரட்டியது: ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் 900 கோடி ரூபாய் நிதி திரட்டியது.முன்னுரிமை அடிப்படையில் ஈக்விட்டி பங்குகளாக மாற்றக்கூடிய வாரண்டுகள் மூலம் எலாரா இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட், டனோ இன்வெஸ்ட்மெண்ட் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் ஆகியவற்றிடம் இருந்து நிதி திரட்டி இருப்பதாக நிறுவனம் அறிவித்தது