சிஸ்கோவில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்! லாபத்தை அதிகரிக்க வேற ஐடியா இருக்காம்!
நெட்வொர்க் நிறுவனமான சிஸ்கோ தனது வணிகத்தை மறுசீரமைக்கும் திட்டத்திற்காக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. அதிக வளர்ச்சி அடைந்து வரும் முதலீடுகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட சிஸ்கோ நிறுவனத்தில் 2023 நிதியாண்டின்படி மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 84,900 என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிநீக்கத்தால் பாதிக்கப்படும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவனம் இன்னும் முடிவு செய்யவில்லை.
பிப்ரவரி 14ஆம் தேதி சிஸ்கோ நிறுவனம் தனது வருவாய் அழைப்பிற்கு தயாராகி வருவதால், அடுத்த வார தொடக்கத்தில் அறிவிப்பு வரலாம் என்று கூறப்படுகிறது.
நவம்பர் 2022 இல், சிஸ்கோ அதன் பணியாளர்களில் சுமார் 5% பேர் வேலைநீக்கம் செய்தது. இதனால், சிஸ்கோ நிறுவனத்துக்கு 600 மில்லியன் டாலர் செலவு ஏற்பட்டது. இந்நிலையில், விரைவில் வெளியாக இருக்கும் ஆட்குறைப்பு பற்றி சிஸ்கோ அதிகாரபூர்வமாகக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
நோக்கியா மற்றும் எரிக்சன் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஆண்டு செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைக்க குறைத்தன. அமேசான், ஆல்பாபெட் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் சமீபத்திய வாரங்களில் பணிநீக்க நடவடிக்கையில் கவனம் செயல்படுத்தியுள்ளன.
முதல் காலாண்டில் ஆர்டர்கள் மந்தமாக இருந்ததாக சிஸ்கோ கூறியது. முந்தைய வருவாய் அழைப்பில் ஆண்டு வருவாய் மற்றும் லாபக் கணிப்புகளை அழைப்பில் குறைத்துள்ளது. இது சிஸ்கோவின் நெட்வொர்க்கிங் கருவிகளுக்கான தேவை குறைந்து வருவதைக் குறிக்கிறது.
சிஸ்கோ நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில் விநியோகச் சங்கிலியில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய மந்தநிலையும் குறிப்பிடத்தக்க அளவு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.