இப்படியா கவனக்குறைவா இருப்பது! குழந்தையை தவறுதலாக ஓவனில் வைத்த தாய்: பின்னர் நேர்ந்த சோகம்
அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது குழந்தை ஓவனில் வைத்து தூங்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பரிதாபம்
அமெரிக்காவில் மிசோரியின்(Missouri) கன்சாஸ் நகரை(Kansas City) சேர்ந்த மரியா தாமஸ்(Mariah Thomas) என்ற பெண் ஒருவர், தன்னுடைய கவனக்குறைவால் குழந்தையை இழந்துள்ளார்.
மரியா தாமஸ் குழந்தையை தூங்க வைத்துவிட்டு அதை தொட்டிலுக்கு பதிலாக தவறுதலாய் ஓவன்(oven) அடுப்பில் வைத்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
அத்துடன் குழந்தைக்கு வெளிப்படையான தீக்காயங்களும் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், குழந்தையின் தாயார் மீது குழந்தையின் உயிருக்கு ஏற்படுத்தியதற்கான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை ஊகிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.