கண்ணான கண்ணே.. அன்பு மகனுக்கு முத்தம் கொடுக்கும் நயன்தாரா.. அவரே வெளியிட்ட அழகிய வீடியோ

நயந்தாரா
நடிகை நயந்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர்நடிப்பில் கடைசியாக அன்னபூரணி திரைப்படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற்று தரவில்லை.
அடுத்ததாக டெஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை நயன்தாரா மண்ணாங்கட்டி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகை நயன்தாரா கடந்த 2022ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயார்.
அழகிய வீடியோ
அவ்வப்போது தனது மகன்களுடன் இருக்கும் அழகிய வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் நயன்தாரா பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது தனது மகனுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா வெளியிட்ட இந்த அழகிய வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ..
https://twitter.com/NayantharaU/status/1756558319693525407