தேர்தல் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் இவ்வருடத்தில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் செய்திச் சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டி
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்று வரும் இந்து சமுத்திர பிராந்திய மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதியுடன் இந்திய செய்திச் சேவை இந்த நேர்காணலை நடத்தியது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.