‘கொலைவெறி’ பாடல் ‘3’ படத்தை விழுங்கிவிட்டது: ஐஸ்வர்யா வருத்தம்
இப்படம் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்துள்ள இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது முதல் படமான ‘3’ குறித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”சில விஷயங்கள் நடக்க வேண்டும் என்று இருந்தால் அதற்கு நாம் தயாராகவே முடியாது.
அப்படித்தான் ‘கொலவெறி’ பாடல் எங்கள் வாழ்க்கையில் நடந்தது. அந்த பாடல் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அது, படத்திற்கு பலமாக இருக்கும் என நினைத்தால் பலவீனமாக முடிந்துவிட்டது. நல்ல கதையம்சமுள்ள 3 படத்திற்கு அப்பாடல் பெரிய அழுத்தமாக மாறிவிட்டது.
சொல்லப் போனால் படத்தையே விழுங்கிவிட்டது. ஏனென்றால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கும்போது, அதன் ரிலீஸின் போது கூட யாரும் அதைப் பற்றி பேசவில்லை. அது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும்போது பலரும் எனக்கு போன் செய்து பாராட்டுகிறார்கள்.