கயல் ஆனந்தி நடிப்பில் ”ஒயிட் ரோஸ்”: வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
தமிழில் வெளியான ‘கயல்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. இவர் பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து தனக்கு என ரசிகர் பட்டாளத்தில் உருவாக்கியவர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆனந்தி-சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்த நிலையில் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ”மங்கை” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படம் ”ஒயிட் ரோஸ்”. இந்த திரைப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் வில்லனாக நடித்துள்ளார்.
மேலும் இதில் சசிலயா, கணேஷ், ராமநாதன், விஜித் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.