Actress Tamannaah: சமையல் கிளாஸ் எடுத்த தமன்னா.. Cheat Day இல்லையாம்.. Chaat Day வாம்!
சென்னை: நடிகை தமன்னா பல ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் இவர் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
அடுத்தடுத்து படங்களில் மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டு வரும் போட்டோஷூட் புகைப்படங்களும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் போட்டோஷூட் புகைப்படங்கள் மட்டும் இல்லாமல் பல வீடியோக்களையும் தமன்னா இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
தற்போது தன்னுடைய உணவு குறித்த வீடியோவை தமன்னா பதிவிட்டுள்ளது ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இவரது அடுத்தடுத்த பதிவுகளால் இவரை இன்ஸ்டாகிராமில் 25 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.
வெளிநாடுகளுக்கு அடிக்கடி டிரிப் செல்லும் தமன்னா அந்த வீடியோக்களையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். மேலும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னா காதலில் உள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் அது தொடர்பான வீடியோக்களையும் பார்க்க முடிகிறது.
நடிகை தமன்னா: தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருபவர் தமன்னா. தமிழில் கேடி என்ற படம் மூலம் என்ட்ரி கொடுத்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள தமன்னா, பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் தமன்னா காவாலா என்ற பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடல் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது.
ரசிகர்களை கவர்ந்த காவாலா பாடல்: மேலும் சமூக வலைதளங்களிலும் இந்த பாடலுக்கு அதிகமானோர் ஆட்டம் போட்டிருந்தனர். துவக்கத்தில் கவர்ச்சி இல்லாமல் நடித்து வந்த தமன்னா, கார்த்தியின் சிறுத்தை திரைப்படத்தில் கவர்ச்சி காட்டத் துவங்கினார். இவரது கவர்ச்சிக்கு ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டிய நிலையில் தொடர்ந்து இவர் எல்லை மீறிய கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களிலும் இந்த கவர்ச்சி அதீதமாக காணப்படுகிறது. சமூக வலைதளங்களில் தன்னுடைய அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் தமன்னா.