நீங்கள் விளக்கேற்றும் பயன்படுத்தும் திரிகளும்.. அதன் பலன்களும்..!
நீங்கள் விளக்கேற்றும் பயன்படுத்தும் திரிகளும்.. அதன் பலன்களும்..!
வீடு, கோயில்களில் விளக்கேற்றும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது.
தீபம் ஏற்ற பயன்படுத்தும் விளக்குகளில் மண் அகல், காமாட்சி விளக்கு, குத்து விளக்கு என்று பல வகைகள் இருக்கின்றது.
தீபம் ஏற்ற பயன்படுத்தும் எண்ணெயில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நெய் என பல வகைகள் இருக்கின்றது.
அதேபோல் தான் தீபம் ஏற்ற பயன்படுத்தும் விளக்குத் திரிகளிலும் பல வகைகள் இருக்கின்றது. ஆனால் நம்மில் பலரது வீடுகளில் விளக்கேற்ற பயன்படுத்துவது பஞ்சு திரி மட்டும் தான். திரியில் பஞ்சு திரியை தவிர்த்து தாமரைத்தண்டு திரி, சிவப்பு திரி, மஞ்சள் திரி, வாழைநார் திரி, வெள்ளெருக்கு திரி என்று பல வகைகள் இருக்கின்றது.
இந்த திரிகளை கொண்டு தீபம் ஏற்றினால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பஞ்சு திரி கொண்டு தீபம் போட்டால் வீட்டில் லட்சமி கடாச்சம் பெருகும். செல்வ செழிப்பு ஏற்படும்.
வாழைநார் திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தைகள் நோயின்றி வாழ முடியும்.
தாமரைத்தண்டு திரியால் விளக்கு போட்டால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
வெள்ளெருக்கு திரியால் விளக்கு போட்டால் செல்வ செழிப்பு ஏற்படும். பணப் பிரச்சனை நீங்கும்.
மஞ்சள் திரி பயன்படுத்தி விளக்கேற்றினால் உடல் ஆரோக்கியம் பெறும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். திருமணத் தடை நீங்கும்.
சிவப்பு திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டு வந்தால் கடன் பிரச்சனை நீங்கும். பண வரவு அதிகரிக்கும்.