ஜெ யிலுக்குள் இருந்தாலும் மக்களிடம் பேசிய இம்ரான் கான்! அதிர்ந்துபோன பாகிஸ்தான் ராணுவம்! என்ன நடந்தது
இஸ்லாமபாத்: பாகிஸ்தான் நாட்டில் சிறையில் இருக்கும் இம்ரான் கானை தேர்தல் பிரச்சாரங்களில் பேச வைத்துள்ளனர்.
இது வரும் காலங்களில் தேர்தல் குறித்த மிகப் பெரிய கேள்வியை எழுப்புகிறது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த பிப்.8ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கி 3 நாட்கள் முடிந்த பிறகும் இன்னுமே கூட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், முதற்கட்ட முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது இம்ரான் கான் கட்சியே முன்னிலையில் உள்ளது. இருப்பினும், அவரை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் திரைமறைவில் நடந்து வருகிறது.
பாகிஸ்தான் தேர்தல்: இது ஒரு பக்கம் இருக்க இந்த முறை நடந்த பாகிஸ்தான் தேர்தல் ரொம்பவே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த முறை அங்கே மும்முனை போட்டி நிலவிய நிலையில், அதில் இம்ரான் கான் கட்சிக்கு மட்டும் பல சிக்கல்கள் இருந்தது. குறிப்பாக இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவரால் பிரச்சாரத்தில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியவில்லை. அப்படி இருந்தும் அவரது கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதற்கான காரணம் சுவாரசியமானது
இம்ரான் கான் சிறையில் இருந்த நிலையில், பிரச்சாரத்திற்கு உதவ அவரது கட்சியினர் தொழில்நுட்பம் பக்கம் திரும்பினர். உலகமே அலறும் ஏஐ மற்றும் டீப் பேக் தொழில்நுட்பங்களைக் கண்டு அலறும் நிலையில், அதையே இம்ரான் கான் கட்சியினர் துணைக்கு அழைத்துக் கொண்டு தேர்தலைச் சந்தித்துள்ளனர். பிரச்சார காலத்தில் இம்ரான் கானின் டீப் பேக் வீடியோக்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின.