காஸா: பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்தது
ஹமாஸ் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அக்.7-ம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1,200-க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பலியாகினர்.
இஸ்ரேல் அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக காஸாவில் நடத்திவரும் வான்வழி மற்றும் தரைவழி போர் நடவடிக்கைகள் 5-வது மாதமாக தொடர்ந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 117 பேர் பலியானதாகவும் ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 28,064 ஆக உயர்ந்துள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸாவில் 3-இல் 2 பங்கு ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் 80 சதவிகித மக்கள் நெரிசல் மிகுந்த ராபாவுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது ராபா நோக்கி போர் நடவடிக்கையை விரிவாக்கும் இஸ்ரேலின் முடிவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளன.