AUSvsWI.. 242 ரன் டார்கெட்.. மேக்ஸ்வெல் சரவெடி.. ரோமன் பவல் அதிரடி.. விறுவிறுப்பான போட்டியின் முடிவு
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று வெஸ்ட் இண்டிஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆஸ்திரேலிய அடிலைடு மைதானத்தில் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 22(19), ஜோஸ் இங்லீஷ் 4(6) ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்கள்.
இதற்கு அடுத்து கேப்டன் மிட்சல் மார்ச் அதிரடியாக விளையாடி 12 பந்தில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஸ்டாய்னிஸ் 15 பந்தில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 55 பந்தில் ஐந்தாவது சர்வதேச டி20 சதத்தை அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் சாதனையை சமன் செய்தார்.
இறுதி வரை ஆட்டம் இழக்காத மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் உடன் 120 ரன்களும், டிம் டேவிட் 14 பந்தில் இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர் உடன் 31 ரன்களும் எடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 241 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.