AUSvsWI.. 218 ஸ்ட்ரைக்ரேட்.. மேக்ஸ்வெல் மின்னல் வேக சதம்.. ரோகித் சூர்யா ரெக்கார்ட் சமன்
இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி தோல்வி அடைந்திருந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி அடிலைடு மைதானத்தில் நடக்கிறது.
இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டிஸ் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 22(19), ஜோஸ் இங்லீஷ் 4(6) மற்றும் கேப்டன் மிட்சல் மார்ஸ் 29(12) ஸ்டாய்னிஸ் 16(19) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதற்கு அடுத்து மேக்ஸ்வெல் மற்றும் டீம் டேவிட் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். உள்ளே வந்ததிலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார்.
மேக்ஸ்வெல் தனது 50ஆவது பந்தை இந்த போட்டியில் சந்தித்த பொழுது ஒன்பது பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது ஐந்தாவது சதத்தை அடித்து அமர்க்களப்படுத்தினார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவர் மட்டுமே 5 சதங்கள் அடித்த வீரர்களாக இருந்தார்கள். தற்பொழுது இந்தப் பட்டியலில் மேக்ஸ்வெல்லும் இணைந்து இருக்கிறார்.
மேலும் சதம் அடித்த பிறகும் மேக்ஸ்வெல் அதிரடி மட்டும் நிற்கவே இல்லை. மேலும் ஐந்து பந்துகளை சந்தித்த அவர் 20 ரன்கள் எடுத்தார். மொத்தமாக 55 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 120 ரன்கள் குவித்தார். இவருடன் நின்ற டிம் டேவிட் 14 பந்தில் இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர் உடன் ஆட்டம் இழக்காமல் 31 ரன்கள் எடுத்தார்.