செம டெரர் பீஸா இருக்காரே சூர்யா!. வைரலாகும் ‘கங்குவா’ லுக் புகைப்படம்!..

நேருக்கு நேர் படத்தில் சாக்லெட் பாயாக அறிமுகமான நடிகர் சூர்யா அதன்பின் பல திரைப்படங்களிலும் சாக்லேட் பாயாகவே நடித்தார். அதன்பின் நந்தா, மௌனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன் ஆகிய திரைப்படங்கள் மூலம் தான் ஒரு சாக்லேட் பாய் என்கிற இமேஜை மாற்றினார்.

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நன்றாக என்னால் நடிக்கவும் முடியும் என சூர்யா காண்பித்தார். அதன்பின் இப்போது வரை பல திரைப்படங்களிலும் நடித்துவிட்டார். சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தார்.

இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஆங்கில பட பாணியில் இது ஒரு சரித்திர கதை கொண்ட திரைப்படமாகும். இப்படம் பல மொழிகளிலும் உருவாகி வருகிறது. இப்படத்தில் இதுவரை பார்க்காத சூர்யாவை ரசிகர்கள் பார்ப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல ஊர்களிலும் நடந்து வருகிறது. கொடைக்கானலில் அடர்ந்த காட்டுப்பகுதியிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இப்படத்திற்கு நடிகர் சூர்யா கடுமையான உழைப்பை போட்டிருக்கிறார். இப்படத்திற்காக செமையாக வொர்க் அவுட் செய்து உடலை பிட் என மாற்றியிருக்கிறார்.

இந்நிலையில்தான், சூர்யாவின் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிக்கென்ற உடலில் கையில் டாட்டுவெல்லாம் வரைந்து ஆளே மாறியிருக்கிறார் சூர்யா. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *