அண்டர் 19 உலக கோப்பை தொடர் – அதிக ரன்கள் ,அதிக விக்கெட் எடுத்தவர்கள் லிஸ்டில் இந்தியா ஆதிக்கம்

ICC U19 World cup :ஐசிசி அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வழக்கம் போல் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை தழுவி விட்டது. இந்த நிலையில் இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல் குறித்து தற்போது நாம் பார்க்கலாம் .

இதில் இந்திய அணியின் கேப்டன் உதை சகாரன் ஏழு போட்டியில் விளையாடி 397 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், மூன்று அரை சதம் அடங்கும். இவர் மொத்தமாக 27 பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் சர்பிராஸ் கானின் தம்பி முசிர்கான் 7 போட்டிகளில் விளையாடி அவர் 360 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதம், ஒரு அரை சதம் அடங்கும். அவர் மொத்தமாக 32 பவுண்டரி 8 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிக்ஸ்டன் 309 ரன்களும், ஆஸ்திரேலியா கேப்டன் வைபிகன் 304 ரன்களும், இந்திய வீரர் சச்சின் தாஸ் 303 ரன்கள் அடித்திருக்கிறார்கள்.

இதேபோன்று பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா மாபாக்கா ஆறு போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று இந்திய வீரர் சௌமி குமார் பாண்டே 7 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். பாகிஸ்தான் வீரர் உபாய் சா ஆறு போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது இடத்திலும் இங்கிலாந்து வீரர் அலி நான்கு போட்டிகள் விளையாடி 14 விக்கெட்டுகள் எடுத்து நான்காவது இடத்தில் உள்ளனர்.

இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் நமன் திவாரி 12 விக்கெட்டுகள் வீழ்த்திருக்கிறார். எட்டாவது இடத்தில் இந்திய வீரர் ராஜ் லம்பானி 11 விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார். அதிக கேட்ச் பிடித்தவர்கள் வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் 7 போட்டிகள் விளையாடி ஆறு கேட்ச்சுகளை பிடித்து முதலிடத்தில் இருக்கிறார்.

இந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்த அணி பட்டியலில் இந்தியா தான் முதல் ஐந்து இடத்தில் மூன்று இடங்களை பிடித்திருக்கிறது. அமெரிக்க அணிக்கு எதிராக 326 ரன்கள் அடித்து இந்தியா முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் நேபாள் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி 302 ரன்கள் அடித்திருந்தது, அயர்லாந்து அணிக்காக இந்திய அணி 301 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்திலும் ,நேபாள் அணிக்கு எதிராக 297 ரன்கள் அடித்தது நான்காவது இடத்திலும் இந்தியா உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *