வெறும் 3 ரூபாயில் இருந்து ₹452 ஆக உயர்ந்த பங்கின் விலை!உங்க முதலீடு பட்டியல்ல இந்த நிறுவனம் இருக்கா?
பங்குச்சந்தை முதலீடுகள் சரியான முறையில் ஆய்வு செய்து திட்டமிட்டு செய்யப்பட்டால் நாம் எதிர்பார்த்த லாபத்தை தரக்கூடியவை. அப்படி இந்த ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் இப்போது லட்சாதிபதி ஆகிவிட்டனர் தெரியுமா?
ஜாவேரி கிரெடிட்ஸ் அண்ட் கேபிடல் லிமிடெட் குஜராத்தில் பங்கு தரகு நிறுவனமாக செயல்படுகிறது. பங்குச்சந்தைகளில் வர்த்தகம் மேற்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு முகவராக ஒரு தரவு தளத்தை வழங்குகிறது. மியூட்சுவல் ஃபண்டுகள், ஐபிஓ போன்றவற்றில் முதலீடு செய்வதற்கான தளமாகவும் இது திகழ்கிறது.
லட்சங்களில் முதலீடு செய்திருந்தால் கோடீஸ்வரர்: ஜாவேரி கிரெடிட்ஸ் அண்ட் கேபிடல் லிமிடெட் (Jhaveri Credits and Capital Ltd) எனப்படும் ஸ்மால் கேப் நிறுவனம் 2 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 14,745 மடங்கு லாபத்தை தந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜாவேரி கிரெடிட்ஸ் அண்ட் கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை வெறும் 3.05 ரூபாய் தான். இப்போது 452.80 ரூபாய் என உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2022இல் இந்த நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 1.48 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும் தெரியுமா.
நிறுவனத்தின் செயல்பாடுகள்: ஜாவேரி கிரெடிட்ஸ் அண்ட் கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் லாபம் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.23 லட்சமாக உயர்ந்துள்ளது. கூடுதலாக மொத்த லாபம் என்பது வெறும் 2 லட்சம் ரூபாயில் இருந்து 34 லட்சம் ரூபாய் என உச்சத்தை தொட்டுள்ளது.
செயல்பாட்டு வருவாய் மற்றும் லாபம் காரணமாக இதன் RoE எனப்படும் ரிட்டர்ன் ஆஃப் ஈக்விட்டி 3.67%இல் இருந்து 8.99%ஆக உயர்ந்துவிட்டது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 293 கோடி ரூபாயாக உள்ளது.
விரைவில் ரியல் எஸ்டேடில் களமிறங்க திட்டம்: ஜாவேரி கிரெடிட்ஸ் அண்ட் கேபிடல் லிமிடெட் நிறுவனம் விரைவில் ரியல் எஸ்டேட் துறையில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பங்குதாரர்களை பார்த்தால், புரமோட்டர்களே 74.25 % பங்குகளை வைத்துள்ளனர். சில்லறை முதலீட்டாளர்கள் வசம் 25.74% பங்குகள் இருக்கின்றன.