நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் அசால்ட்டாக இருக்காதீங்க… உயிருக்கே ஆபத்து ஏற்படும்
நெஞ்செரிச்சல் பிரச்சினையை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் இறுதியில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
நெஞ்செரிச்சல்
பொதுவாக அதிகமான கார மற்றும் எண்ணெயில் பொறத்த உணவுகளை சாப்பிட்டால் அது நெஞ்செரிச்சலை ஏற்படுத்துவதுடன், வயிற்றிலுள்ள அமிலங்கள் தொண்டை வரை வந்து எரிச்சலை உணர்வை ஏற்படுத்துவதே இந்த பிரச்சினையாகும்.
கொழுப்பு நிறைந்த உணவுகள் மட்டுமின்றி, மருந்து பயன்பாடு, கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துதல், மன அழுத்தம் இவை நெஞ்செரிச்சலுக்கு காரணமாக இருக்கின்றது.
எச்சரிக்கை அவசியம்
உணவுக்குழாய் புற்றுநோய் காரணமாக அமில ரிஃப்ளக்ஸ் ஏற்பட்டு நெஞ்செரிச்சல் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் வெளியே தெரியவதற்கு அதிக காலம் ஏற்படும், ஆதலால் நெஞ்செரிச்சல் பிரச்சினை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அனுகவும்.
அடிக்கடி நோயினால் பாதிக்கப்படுவது, எடை இழப்பு, கரகரப்பான குரல், தொடர் இருமல் மற்றும் தொண்டை வலி இந்த அறிகுறிகளுடன் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் வாய் துர்நாற்றம், நெஞ்செரிச்சல், உணவு விழுங்கும் போது வலி போன்ற அறிகுறிகள் மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவரை அனுகவும்.
சில தருணங்களில் மாரடைப்பிற்கு அறிகுறியாக நெஞ்செரிச்சல் காணப்படுகின்றது. அதாவது தமனிகளில் அடைப்பு காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதுடன், மார்பு வலி மற்றும் மூச்சுத் திணறல் மற்றும் குளிர் வியர்வை ஆகியவற்றுடன், நெஞ்செரிச்சலும் முன்பே ஏற்பட்டால் மாரடைப்பு பிரச்சினையை ஏற்படுத்தும்.
வயிற்றின் மத்தியில் எரிச்சல் அல்லது கடிப்பது போன்ற உணர்வு, பசியிழப்பு, நெஞ்செரிச்சல், அஜீரணம், எடை இழப்பு ஆகியவை வயிற்றுப்புண்களின் பாதிப்பாகவும் இருக்கின்றது.