பாடல்களைப் பாடி Brain Strokeகிற்கு சிகிச்சை.. எய்ம்ஸின் இந்த புதிய சிகிச்சை எப்படி வேலை செய்யும்? ஒரு பார்வை!
எய்ம்ஸின் டாக்டர் தீப்தி விபா, மூளை பக்கவாதத்திற்குப் பிறகு கேட்கும் மற்றும் பேசும் திறனை இழந்த நோயாளிகளுக்கு இசையின் மூலம் ஹம்மிங் மற்றும் பேசுவதைக் கற்பிப்பதாகக் கூறியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக “அஃபாசியா” நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த இசை ரீதியான சிகிச்சை தயாராகி வருவதாகவும், இதில் டெல்லி ஐஐடியின் உதவியை, எய்ம்ஸ் நரம்பியல் பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
சரி அஃபிசியா என்றால் என்ன?
மூளை பக்கவாதத்திற்குப் பிறகு, சுமார் 21 முதல் 38 சதவிகித நோயாளிகள் அஃபாசியாவால் பாதிக்கப்படுகின்றனர். உண்மையில், அஃபாசியாவில், நோயாளியின் மூளையின் இடது பகுதி வேலை செய்வதை நிறுத்துகிறது. மூளையின் இடது பகுதியால் தான் ஒருவர் பேசுவது, விஷயங்களைப் புரிந்துகொள்வது, உணர்வுகளை மக்கள் முன் வெளிப்படுத்துவது போன்றவற்றை செயல்படுத்துகின்றனர்.
ஆகையால் அஃபேசியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒரு சிறிய வார்த்தை கூட பேச முடியாத நிலையில் உள்ளதால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, எய்ம்ஸ் நரம்பியல் துறை நோயாளிகளுக்கு இசை சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் இத்தகைய நோயாளிகளுக்கு இசை சிகிச்சை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
இசை சிகிச்சை எவ்வாறு வழங்கப்படுகிறது?
அஃபாசியா, நோயாளியின் மூளையின் இடது பகுதி வேலை செய்யாது, ஆனால் வலது பகுதி முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும், இதன் காரணமாக நோயாளி இசையைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல் அதன் ட்யூனையும் முணுமுணுக்கிறார் என்று டாக்டர் விபா கூறுகிறார். அஃபேசியா காரணமாக நோயாளி ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாத நிலையில், இசை சிகிச்சை மூலம் அவர் முழு பாடலையும் முணுமுணுக்க துவங்குகிறார்.
ஆகவே இந்த மியூசிக் தெரபி மூலம், நோயாளியின் வலது பக்கத்தை செயல்படுத்துவதன் மூலம், அவருக்கு இசையின் ட்யூனைப் பேசவும் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதில், முதலில், நோயாளியின் முன் சிறிய இசை ட்யூன்கள் இசைக்கப்படுகின்றன, இது நோயாளி புரிந்துகொள்வது மட்டுமல்லாமல் அவற்றை ஹம் செய்யவும் முடியும்.
இந்த ட்யூன்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றன. இது நோயாளிகளுக்கு முதலில் துண்டுகளாகவும் பின்னர் முழு வரியையும் பேசுவதன் மூலம் விளக்கப்படுகிறது. ரகுபதி ராகவ் ராஜா ராம் அல்லது ஏய் மேரே வதன் கே லோகன் போன்ற ட்யூன்கள் இதில் அடங்கும், இது கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியரும் அறிந்த மற்றும் கேட்ட பாடல்கள் தான்.
சரி இந்த செயல்முறை இப்போது எந்த அளவை எட்டியுள்ளது?
தற்போது, ஐஐடி டெல்லி மற்றும் எய்ம்ஸ் டெல்லி ஆகியவை இணைந்து நோயாளிகளைப் பற்றிய ஆராய்ச்சி செய்து அதன் தொகுதியை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளனர். பேராசிரியை தீப்தி கூறுகையில், கர்நாடக சங்கீதத்தில் நிபுணத்துவம் பெற்ற, இசை நுணுக்கங்களை நன்கு அறிந்த மருத்துவர் ஒருவர் இருக்கிறார், எனவே அவரிடம் சில ட்யூன்கள் ஆய்வுகளில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
முதலில் பாதிக்கப்பட்ட 60 நோயாளிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டு, அதில் முதல் 30 நோயாளிகளுக்கு இசை சிகிச்சையும், மீதமுள்ள 30 நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையும் அளிக்கப்படும். இதன் பிறகு, ஒவ்வொரு 3 மாதங்களுக்கும், அவற்றில் மாற்றங்கள் குறிப்பிடப்பட்டு முடிவுகள் வழங்கப்படும்.