இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில் இன்று முதல் UPI சேவை அறிமுகம்!

பிரதமர் மோடி, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருடன் இணைந்து, இலங்கை மற்றும் மொரீஷியஸில் UPI பேமெண்ட் சேவையை தொடங்கி வைக்க இருக்கிறார்.

மூன்று நாட்டுத் தலைவர்களும் கலந்துகொள்ளும் வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியில் மொரீஷியஸ் நாட்டில் ரூபே கார்டு சேவையும் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் இலங்கை மற்றும் மொரீஷியஸுக்குப் பயணிக்கும் இந்தியப் பயணிகளும், இந்தியாவிற்கு வரும் மொரிஷியஸ், இலங்கை மக்களும் UPI முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.

மொரீஷியஸில் RuPay கார்டு சேவையை நீட்டிப்பதன் மூலம் மொரீஷியஸ் வங்கிகள் மொரீஷியஸில் RuPay அடிப்படையிலான கார்டுகளை வழங்க உள்ளது. இது இந்தியா மற்றும் மொரீஷியஸ் ஆகிய இரு நாடுகளிலும் ருபே அட்டையைப் பயன்படுத்துவதை எளிதாக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி அனுபவங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்றும் ஃபின்டெக் கண்டுபிடிப்புகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றும் கூறியிருக்கிறது.

அனைத்து பேமெண்ட் செயலிகளிலும் இந்த UPI முறையில் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். இதனால், இந்த முறை இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது இந்த UPI டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை பல நாடுகளுக்கும் விரிவுபடுத்த இந்தியா முயற்சி எடுத்து வருகிறது.

அண்மையில் முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் UPI பணப் பரிவர்த்தனை முறையை ஏற்றுக்கொண்டது. பிள் டவரைப் பார்க்கச் சென்றால், UPI மூலம் முன்கூட்டியே பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *