பெட்டி கடைல குச்சி மிட்டாய் வாங்கற மாதிரி இந்த காரை எல்லாரும் வாங்கீட்டு இருக்காங்க! மாருதி, டாடாவுக்கு சவால்
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub 4m Compact SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் 11,831 வெனியூ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 10,738 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 10 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது ஹூண்டாய் வெனியூ.
ஹூண்டாய் வெனியூ காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். அதே நேரத்தில் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி உள்ளிட்ட கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் வெனியூ காரில், அடாஸ் (Advanced Driver Assistance Systems – ADAS) உள்பட பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப விலை 7.94 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.48 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதுதவிர ஹூண்டாய் வெனியூ என் லைன் (Hyundai Venue N Line) மாடலும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் வெனியூ என் லைன் மாடலின் ஆரம்ப விலை 12.08 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 13.90 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.