மாட்டிக்க இருந்த மனோஜ்… செம பில்டப்பில் தப்பிச்சிட்டாரே..! ரசிகர்களை ஏமாத்துறீங்க டைரக்டரே..!
இன்றைய எபிசோட்டில் மீனா சமையலறையில் வேலை செய்து கொண்டு இருக்க அங்கே முத்து வருகிறார். வாங்க சாப்பிடலாம் எனக் கூப்பிட நான் வெளியில் சாப்பிட்டு வருவேன் எனச் சொன்னேனே எனக் கூறுகிறார். பால் வேணுமா எனக் கேட்க இல்ல தண்ணி போதும் என்கிறார்.
பின்னர் கிச்சன் சிங்கை பார்த்து விட்டு சாப்பிட்ட தட்டை கூடவா கழுவ முடியாது எனச் சத்தம் போட அவங்க வேலைக்கு போறாங்க என்கிறார் மீனா. அப்போ நைட் வந்து செய்றது தானே எனக் கேட்க டயர்டா இருப்பாங்க என மீனா சொல்லி விடுகிறார். காலையில் எழுந்து நைட் ஃபுல்லா வேலை செஞ்சுட்டு இருக்கியே உனக்கு எல்லாம் டயர்ட் ஆகாதா எனக் கேட்கிறார் முத்து.
இன்னைக்கு என்ன சாப்பாடு செஞ்ச என்று கேட்ட மீனா, ரோகினிக்கு பிடிச்ச மீன் குழம்பு. ஸ்ருதிக்கு சிக்கன் சூப், ரவிக்கும், உங்க அண்ணனுக்கு சப்பாத்தி, சிக்கன் குழம்பு. மாமா, அத்தைக்கு கீரை கடையல் செஞ்சேன் என்கிறார் மீனா. உனக்கு நான் வேலை செஞ்சேன். மிச்சம் இருந்ததை சாப்பிட்டேன் எனக் கூறுகிறார்.
அடுத்த நாள் ரவியும் ஸ்ருதியும் மனோஜ் வேலை பார்த்த கார் ஷோரூம்மிற்கு கார் வாங்க வருகின்றனர். ரவி, அங்கிருப்பவரிடம் மனோஜை அழைக்க அவர் அப்படி யாரும் வேலை செய்யலை என்கிறார். உடனே மனோஜுக்கு கால் செய்ய அவர் நான் அபீஸில் இருப்பதாக கூறுகிறார். உடனே ரவி இங்கிருப்பவர் உன்னை தெரியலை எனக் கூற யார் சொன்னா போனை குடு எனத் தெனாவெட்டாக கேட்கிறார்.
பின்னர் அங்கிருப்பவரிடம் ரவி போனை கொடுக்க இங்கிலீஷில் சீனை போட அங்கிருப்பவரும் உண்மை என நினைத்து சாரி சார். நான் புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கேன். தெரியலை மன்னிச்சிடுங்க என்கிறார். இதையடுத்து மனோஜ் இந்த வாரம் வேண்டாம். அடுத்த வாரம் எடுங்க. நானே கம்மியா பண்ணி தரேன் என்கிறார்.
அதை தொடர்ந்து வீட்டுக்கு வந்து இந்த விஷயத்தினை விஜயாவிடம் கூற அவர் ஷாக் ஆகி கேட்டுக்கொண்டு இருக்கின்றார். அங்கு ரோகினி வந்து என்ன விஷயம் எனக் கேட்க ஆபிஸில் நடந்ததை கூறுகின்றான் என சமாளிக்கிறார். அந்த நேரத்தில் வரும் ஸ்ருதி, ரவி மனோஜ் குறித்து சொல்லணும் என்றதும் மனோஜுக்கு திகிலாகி விடுகிறது.
பின்னர் அவர் வேலை செய்யும் இடத்தில் அவருக்கு ரொம்பவே நல்ல பேரு இருக்கு என்கின்றனர். ஆமா திறமைசாலி. ரோகினி அப்பா வந்ததும் தான் கார் ஷோரூம் வச்சு தர சொல்லணும் என்கிறார் விஜயா. உடனே முத்து நானும் கேட்கணும் நினைச்சேன். என்ன உங்க அப்பா சத்தமே இல்ல என்கிறார். அண்ணாமலையும் ஏன்மா அப்பா வரவே இல்லை எனக் கேட்க ரோகினி முழிப்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.