நடுரோட்டில் மகளுடன் பிரபல நடிகை செய்த காரியம்!! இதுதான் இப்போதைக்கு ஹாட் டாபிக்… வீடியோ வைரல்!
நடிகை ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty) விமான நிலையத்தில் தனது குழந்தை உடன், தானும் ஒரு குழந்தையாக லக்கேஜ் கேரியர் வாகனத்தில் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பை விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வினை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகை ஷில்பா ஷெட்டியை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். முன்னணி பாலிவுட் நடிகைகளுள் ஒருவரான ஷில்பா ஷெட்டி, தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். ஷில்பா ஷெட்டி மட்டுமில்லாமல், எந்தவொரு நடிகர், நடிகை மும்பை விமான நிலையத்திற்கு வருவது மற்றும் அங்கிருந்து செல்வதாக இருந்தாலும், அது எப்படியோ ஊடகத்தினருக்கு தெரிந்துவிடுகிறது.
ஏனெனில், இதற்காகவே கேமராக்களுடன் செய்தியாளர்கள் மும்பை விமான நிலையத்தில் எப்போதும் காத்திருக்கின்றனர். இதனால், மும்பை விமான நிலையத்திற்கு வருவதாக இருந்தால் கூட விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை அணிவதை சினிமா நட்சத்திரங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, மும்பை விமான நிலையத்திற்கு வரும்போது, மற்றவர்களிடம் இருந்து ஸ்பெஷலாக தெரிய வேண்டும் என்பதற்காக விசித்திரமான செயல்களில் ஈடுப்படும் பாலிவுட் ஸ்டார்களும் உண்டு.
இந்த வகையில் நடிகை ஷில்பா ஷெட்டி சமீபத்தில் தனது குழந்தைகள் உடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பொருட்களை ஏற்றி செல்ல லக்கேஜ் கேரியர்கள் பயன்படுத்தப்படுவதை பரவலாக எல்லா விமான நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் கூட பார்த்திருப்பீர்கள். மும்பை விமான நிலையத்தில் கொஞ்சம் அட்வான்ஸாக எலக்ட்ரிக்கில் தானாக இயங்கக்கூடிய லக்கேஜ் கேரியர் பயன்படுத்தப்படுகிறது.
அதை பார்த்ததும் நடிகை ஷில்பா ஷெட்டி என்ன நினைத்தாரோ என தெரியவில்லை, உடனே தனது குழந்தையுடன் அதில் பயணம் செய்துள்ளார். இதனை கண்ட அங்கிருந்த ஊடகவியலாளர்கள் வளைத்து, வளைத்து படங்களையும், வீடியோக்களையும் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். ஷில்பா ஷெட்டி சும்மா நடந்துவந்தாலே போட்டோகிராபர்கள் விடமாட்டார்கள், இப்படி வந்தால் சொல்லவா வேண்டும்?
லக்கேஜ் கேரியரில், மடியில் தனது மகளுடன் நடிகை ஷில்பா ஷெட்டி அமர்ந்துக் கொண்டு அதனை இயக்க, அவரது கணவர் மற்றும் மகன் அருகில் நடந்து வருவதை அங்கிருந்து வெளியான வீடியோக்களில் காண முடிகிறது. இந்த சம்பவத்தின்போது, ஷில்பா ஷெட்டி விமானத்தில் மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பின், அங்கிருந்து வீட்டிற்கு காரில் புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையில் தனது காரை நோக்கி சென்றுக் கொண்டிருக்கையில், இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளார். எலக்ட்ரிக் லக்கேஜ் கேரியரில் விமான நிலையத்தின் உள்ளே இருந்து கொஞ்சம் தூரத்துக்கு ஷில்பா ஷெட்டியின் கணவர் இவ்வாறு பயணம் செய்தார். அதாவது, ஷில்பா ஷெட்டியின் கணவர் தான் இந்த ஜாலி பயணத்தை துவங்கி வைத்துள்ளார். பின்னர், அதை பார்த்து ஷில்பா ஷெட்டிக்கு ஆசைவர, கணவரை எழுப்பிவிட்டு இவர் அமர்ந்துள்ளார்.
விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் இருந்த இவர்களது மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 எஸ்யூவி கார் வரையில் இந்த லக்கேஜ் கேரியர் பயணம் தொடர்ந்தது. இந்த எலக்ட்ரிக் லக்கேஜ் கேரியரை இயக்குவது மிக எளிது. ஏனெனில், வெறும் பொத்தான்கள் மூலமாக இவ்வாறான மாடர்ன் லக்கேஜ் கேரியர்கள் இயங்குகின்றன. அதாவது, திருப்புவதற்கு கூட பொத்தான்களை உபயோகித்தாலே போதும். ஸ்டேரிங்கை கஷ்டப்பட்டு திருப்ப வேண்டிய அவசியமில்லை.