போட்டோ எடுக்க சொன்னது குத்தமா? ரசிகரை தாக்கி போனை வீசிய ஆதித்ய நாராயண்!

பிரபல பின்னணி பாடகரான உதித் நாராயணின் மகனும் பாடகருமான ஆதித்ய நாராயண் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் சில பாடல்களை பாடி இருக்கிறார்.

பாடல்களை பாடியது மட்டுமின்றி பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், சத்தீஸ்கரின் பிலாயில் உள்ள ருங்டா கல்லூரியில் கச்சேரியின் போது ஆதித்ய நாராயண் ஒரு ரசிகரை தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அவர் மீது கண்டனங்கள் எழுந்துள்ளது. ஆதித்ய நாராயண் சத்தீஸ்கரின் பிலாயில் உள்ள ஒரு கல்லுரியில் இசை கச்சேரி நடத்துகிறார் என்றதை தெரிந்தவுடன் பல ரசிகர்கள் அதில் கலந்துகொண்டார்கள்.

அப்போது ஆதித்ய நாராயண் ஷாருக்கானின் ‘டான்’ பாடலிலிருந்து பாடகர் ‘ஆஜ் கி ராத்’ பாடலை பாடி கொண்டு இருந்தார். அந்த சமயம் கீழே இருந்த ரசிகர்கள் சில தங்களுடைய போனை கொடுத்து போட்டோ எடுத்து தரும்படி கேட்டு கொண்டு இருந்தார்கள். அதனை பார்த்த ஆதித்ய நாராயண் மிகவும் கடுப்பாகி போனை வாங்கி கொண்டு கூட்டத்திற்குள் வேகமாக வீசினார்.

பிறகு பாடலை பாட தொடங்கினார். மீண்டும் மற்றோரு ரசிகர் கீழே தனது போனை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொடுக்க கூறியுள்ளார். மீண்டும் கடுப்பான ஆதித்ய நாராயண் அந்த ரசிகரின் போனை வாங்கும்போது தனது மைக்கை வைத்து அவருடைய கையில் தாக்கிவிட்டு போனை தூக்கி வீசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் ரசிகர்களிடம் இப்படியா நடந்து கொள்வீர்கள்? எனவும் நீங்கள் நடந்து கொள்வது மிகவும் தவறு எனவும் கூறி வருகிறார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *