பாலிவுட் அழகி மிருணால் தாக்கூருக்கு கோலிவுட்டில் பம்பர் வாய்ப்பு!
பாலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை மிருணால் தாக்கூர். இவர் சீதா ராமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார் என்றே கூறலாம்.
இந்நிலையில், இந்த பாலிவுட் அழகிக்கு தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னென்ன திரைப்படங்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.
STR48
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது தனது 48-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. போஸ்டரில் சிம்பு மிரட்டலான கெட்டப்பில் இருந்தார்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் எந்த பிரபலங்கள் எல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பு வரவில்லை இதனையடுத்து, படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மிருணால் தாக்கூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SK23
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 23-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்கவும் மிருணால் தாக்கூரிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.