மாசி மாதத்தில் திடீர் ராஜ யோகத்தால் இந்த 6 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
30 வருஷம் வாழ்ந்தவனும் இல்ல. 30 வருஷம் தாழ்ந்தவனும் இல்லங்கிறது பழமொழி. தமிழ் மாதத்தின் 11 வது மாதமான மாசி மாதம் 11 வது ராசியான கும்பத்தில் வீற்றிருக்கும் மாதம்.
அத்துடன் கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பின் சனி ஆட்சி பெற்று அமர்ந்திருக்க சூரியன் கூட்டணி அமைக்கப்போகிறார். சனிபகவான் சூரியனுடன் இங்கு 30 நாட்கள்தான் இருப்பார் அதனால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியிலும், செவ்வாய் மகர ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றனர். மகர ராசியில் நிற்கும் புதனும் கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். இவர்களுடன் சுக்கிரன் 24ம் தேதி கும்ப ராசிக்கு செல்கிறார். இதனால் மிகப்பெரிய மாற்றங்கள், அதிர்ஷ்டங்கள் கைகூடப்போகிறது. அதிலும் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தான். தொட்டதெல்லாம் துலங்கும்.
மேஷம்:
வீரத்திற்கு பெயர் போன செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசி நேயர்களே… இந்த ஒரு மாசம் முழுக்க அதிரடி சரவெடி தான். தொட்டதெல்லாம் துலங்கப் போகுது. புதிய முயற்சிகளில் வெற்றி கைவசமாக இருக்கிறது. இழுபறியாக இருந்த வழக்குகள் சுபமான முடிவுக்கு வரும். காதல் கை கூடும். கணவன் மனைவி அன்னியோன்யம் அதிகரிக்கும். திடீர் பணவரவால் திக்குமுக்காடப் போகிறீர்கள்.
ரிஷபம்:
சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி நேயர்களே எடுத்த காரியம் கைகூடும். இந்த ஒரு மாதமும் உங்களுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்க போகிறது. நினைத்ததெல்லாம் நடக்கப் போகிறது. தொழிலில் மேன்மை பெருகும். பணியிடத்தில் பதவி உயர்வு கிட்டும். கணவன்-மனைவி அன்னியோன்யம் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் வந்து சேரும். உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
துலாம்
சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி நேயர்களே… இந்த மாதம் முழுவதுமே பணக்கடலில் நீந்த போகிறீர்கள். வீடு கட்டும் முயற்சியில் நிலம் வாங்குவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் அமைந்துள்ளன. இல்லறம் இனிக்கும். பணியில் பதவி உயர்வு கிட்டு. பெரியோர்களின் அறிமுகத்தால் தொழிலில் லாபம் பெருகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
விருச்சிகம்:
பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே… மாசி மாதத்தில் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் இடமாற்றம், பதவி உயர்வு, பாராட்டுக்கள் கிடைக்கப் பெறலாம். வாகன யோகம் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களால் அனுகூலம் அடைவீர்கள். பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டு. சேமிப்புக்கள் உயரும்.
தனுசு:
வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி நேயர்களே… மாசி மாதம் நடைபெற போகும் சூரியப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது. இந்த மாதத்தில் திறமை பெருகி புகழ் கிட்டப் போகிறது. உறவினர்களிடையே இருந்து வந்த சலசலப்புக்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடும். தொழிலில் புதிய வாய்ப்புக்களால் லாபம் பெறலாம்.
கும்பம்
:
சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி நேயர்களே… மாசி மாதம் நிகழ உள்ள சூரிய பெயர்ச்சியால் திடீர் அதிர்ஷ்ட யோகத்தால் திக்கு முக்காடப் போகிறீர்கள். பணம் பல வழிகளில் வந்து சேரும். ராஜ யோகத்தால் நீண்ட நாள் கனவு நிறைவேறும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் புதிய முயற்சியில் அமோகமான பலன்களை அடையலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.