ஸ்டைலிஷ் லுக்கில் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு சவால் விடும் iQOO நியோ 9 ப்ரோ!
iQOO நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) மொபைல் விரைவில் இந்தியாவில் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போட்டியாக உள்ள மற்ற நிறுவனங்களின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை விட மலிவு விலையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ரூ.40,000க்குள் இந்த மொபைல் விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. iQOO நியோ 9 ப்ரோ ரூ.35,000 முதல் ரூ. 40,000 வரை கிடைக்கும் எனவும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது OnePlus Nord 3, Redmi Note 13 Pro+ போன்ற பிரபலமான ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தற்போது இந்தியாவில் ரூ.39,999 ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படும் OnePlus 12R மொபைலுக்கும் இந்த மொபைல் சவாலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
iQOO Neo 9 பிப்ரவரி 22 அன்று இந்திய சந்தையில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இருப்பினும், அமேசான் இணையதளத்தில் முன்பதிவு செய்வதற்கான வசதி இப்போதே கிடைக்கிறது.
இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும். இது கேமிங் மற்றும் சிறந்த செயல்திறனுக்கு உறுதியளிக்கிறது. இது 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன் கொண்டது. இது நியோ 7 ப்ரோவின் டிஸ்ப்ளேவை விட குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டதாக உள்ளது.
பேட்டரி மற்றும் சார்ஜிங் நியோ 7 ப்ரோவில் உள்ளபடியே இருக்கிறது. iQOO Neo 9 Pro 120W வேகமான சார்ஜிங் வசதியுடன் 5,160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. சமீப கால வழக்கத்துக்கு மாறாக, மொபைலுடன் சார்ஜரும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது என்பது மற்றொரு முக்கிய அம்சம்.
2MP மேக்ரோ ரியர் கேமரா, IMX920 சென்சார் கொண்ட 50MP முதன்மை பின்புற கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா ஆகியவை உள்ளன. iQOO Neo 9 Pro மொபைல் இரண்டு வண்ணங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். ஒன்று கருப்பு நிறத்தில் இருக்கலாம். இன்னொன்று சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த டூயல்-டோன் டிசைனில் ஃபாக்ஸ்-லெதர் ஃபினிஷிங்குடன் இருக்கலாம்.