பாக்கியா ஐடியாவை காலி செய்த கணேஷ்.. புயலடிக்கும் எழிலின் வாழ்க்கை.. என்ன நடக்க போகுதோ?
இன்றைய எபிசோட்டில் கணேஷ் வீட்டிற்கு வருவதால் பாக்கியா அவசர அவசரமாக எழில், அமிர்தா, நிலாவை கோவிலுக்கு அனுப்பி வைக்கிறார். எழில் கேட்டும் கூட கேண்ட்டீன் நல்லா நடந்தா போறதா வேண்டுதல். நீங்க போயிட்டு வாங்க எனக் கூறுகிறார்.
எழில் அமிர்தா பைக்கில் கிளம்பும் நேரத்தில் அங்கு வந்து விடுகிறார் கணேஷ். நான் வரது தெரிஞ்சு உங்கள வெளியில் அனுப்ப பார்க்கிறீங்களா? இருக்கு உங்களுக்கு என எழிலை பின்தொடர்ந்து செல்கிறார். இன்னொரு பக்கம் பாக்யா வீட்டில் எல்லோரையும் அழைக்கிறார்.
பாக்கியா இதை எப்படி சொல்றதுன்னு தெரியாம தான் குழம்பி போய் இருந்தேன். ஆனா இன்னைக்கு நான் சொல்லியே ஆகணும் என்கிறார் பாக்கியா. என்னம்மா பிரச்னையா எனக் கேட்க, ஆமா மாமா பெரிய பிரச்னை தான் என்கிறார். இதனை தொடர்ந்து எல்லாரும் ஹாலில் வந்து அமர்கின்றனர்.
பாக்கியா அமிர்தா விஷயத்தினை உடைக்க எல்லாருக்கு அதிர்ச்சி ஆகி விடுகிறது. எப்படி இது சாத்தியம் என்கிறார் கோபி. தெரியலை சுய நினைவு இல்லாம இருந்தானாம் என்கிறார் பாக்கியா. அதே நேரத்தில் கோயிலில் அமிர்தாவிடம் பேசி விட வேண்டும் என கணேஷ் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.
குடும்பமே அதிர்ச்சியில் இருக்கின்றனர். ராமமூர்த்தி பார்க்கில் ஒரு பையன் நிலாவை தன் குழந்தை மாதிரி இருப்பதாக சொன்னான். அந்த பையனா இருக்குமோ என்கிறார். எல்லாரும் இப்போ என்னவாம் அவனுக்கு எனக் கேட்க நிலாவும், அமிர்தாவும் வேண்டும் என பாக்கியா கூற உச்சக்கட்ட அதிர்ச்சியில் நிற்கின்றனர்.
அதே நேரத்தில் எழிலும், அமிர்தாவும் வந்து அமர்கின்றனர். நிலாவுக்கு ஒரு வேண்டுதல் இருந்துச்சு. அதுக்கு என்ன செய்றதுனு கேட்டுக்கிட்டு வரேன் என உள்ளே செல்கிறார். அவரை பின் தொடர்ந்து வந்த கணேஷ் அமிர்தாவை அழைக்கின்றார். திரும்பி பார்க்கும் அமிர்தாவுக்கு அதிர்ச்சி அதிகமாவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.