எஸ்பிபி இந்த விஷயங்கள் இல்லாம பாட மாட்டாராம்.. ஆச்சர்ய தகவலை சொன்ன பிரபல இசையமைப்பாளர்!
40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உலக அளவில் பெரும் புகழ் பெற்றவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். இவர் தெலுங்கு தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் பாடியுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் 16 இந்திய மொழிகளில் பாடியிருக்கிறார். இவரை பாடும் நிலா என்று தான் இவரது ரசிகர்கள் அழைக்கின்றனர்.
1966 ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கிய பாலசுப்பிரமணியம் முதன்முதலாக சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் தான் பாடினார்.
ஆனால் அந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே எம்ஜிஆர் நடிப்பில் வெளியான அடிமைப்பெண் படத்தில் இவர் பாடிய “ஆயிரம் நிலவே வா” என்ற பாடல் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த ஒரு பாடல் தான் அவரின் புகழை எங்கேயோ கொண்டு சென்றது. தொடர்ந்து இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹரிஷ் ஜெயராஜ் சமீபத்தில் அனிருத் ஆகிய அனைத்து இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றிய பெருமைக்குரிய பாடகராக எஸ்பி பாலசுப்ரமணியம் திகழ்ந்தார்.
இவர்களைத் தவிர புதுமுக இசை அமைப்பாளர்களுடனும் பணியாற்றும் வாய்ப்பு எஸ்பிபிக்கு கிடைத்தது. இருந்தாலும் தான் ஒரு இசைக் கலைஞன் என்ற கர்வத்தை கொள்ளாமல் சினிமாவில் சாதிக்க வரவேண்டும் என்ற எண்ணத்தில் வரும் அனைத்து புதுமுக இசை அமைப்பாளர்களுடனும் பணியாற்றினார்.
அந்த வகையில் பிரபல இசை அமைப்பாளர் ஆன நிவாஸ் கே பிரசன்னா இவருடன் இணைந்து கூட்டத்தில் ஒருத்தன் என்ற படத்தில் எஸ்பிபி ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
அந்த சமயத்தில் எஸ்பிபியின் சில செயல்களை பார்த்து நிவாஸ் ஆச்சரியப்பட்டதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது எஸ்பிபி பாட வரும்போது எப்போதுமே 3 நிறத்தில் பேனாக்களை வைத்திருப்பாராம். எங்கு எப்படி பாட வேண்டும் என்பதை அந்த கலர் பேனாக்களை கொண்டு அவருக்கு ஏற்ற வகையில் குறித்துக் கொள்வாராம்.
அது மட்டுமில்லாமல் அந்த படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள்? ஹீரோ, ஹீரோயின்கள் யார் என்பதையும் அறிந்து கொண்டு தான் பாடுவார் என்று அந்த பேட்டியில் நிவாஸ் கூறியுள்ளார்.