Oil Free Poori: ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லாமல் பொசுபொசு பூரி செய்யலாம்
காலை உணவாகவோ, இரவு உணவாகவோ பூரியை விரும்பி சாப்பிடுவோர் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் இதை எண்ணெயில் சுடுவதால் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் , வயதானவர்கள் என அனைவராலும் சாப்பிட முடியாது.
அந்தவகையில், எண்ணெயில் பொரிக்காமலேயே பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு- 1 கப்
உப்பு- ¼ ஸ்பூன்
தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு போல் பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை 15 நிமிடம் மூடி போட்டு வைத்து மென்மையானதும் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை பூரிக்கு திரட்டுவது போல் வட்ட வடிவத்தில் தேய்த்து கொள்ளவும்.
இப்போது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் இட்லி தட்டுகளை வைத்து அதில் தேய்த்த பூரி மாவை வைத்து 10 நிமிடம் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
அதன்பின், வெந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆறவைக்கவும்.
ஆறியதும், பூரிகளை ஏர் பிரையரில் போட்டு மூடி சுமார் 100ºC வெப்பநிலையில் வைத்து 30 நொடிகள் கழித்து எடுத்தால், எண்ணெய் இல்லாமல் பொசுபொசு பூரி தயார்.
ஏர் பிரையர் இல்லையெனில் அடுப்பில் குக்கர் வைத்து அதற்குள் ஒரு ஸ்டாண்ட் வைத்து வேகவைத்த பூரியை ஒரு தட்டில் வைத்து தட்டை குக்கருக்குள் வைத்து 10 நிமிடம் கழித்து எடுத்தால் எண்ணெய் இல்லாமல் பொசுபொசு பூரி தயார்.