அமித்ஷாவுடன் ஹர்திக் பாண்டியா திடீர் சந்திப்பு.. ரோகித்துக்கு ஆப்பு.. இந்திய அணிக்கு புதிய கேப்டன்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா சந்தித்து பேசி இருப்பது கிரிக்கெட் உலகில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் தான்.

அமித் ஷாவும் இதே பகுதியில் இருந்துதான் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் பதவியில் இருக்கிறார். குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு முதல் ஆண்டில் அவர் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றினார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார் என கூறி அவருக்கு இந்திய டி20 அணியின் கேப்டன் பதவி கிடைத்தது. அதன் பிறகு தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றலாகி வந்த ஹர்திக் பாண்டியா தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால் ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டது பெரும் பிரச்சனையை அந்த அணியில் ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் கடுப்பான ரோகித் சர்மா மீண்டும் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடப் போகிறேன் என முடிவு எடுத்து தற்போது கேப்டன் பதவிக்கு திரும்பி விட்டார். இதனால் ஹர்திக் பாண்டியாவின் இந்திய டி20 அணியின் கேப்டன் கனவு பறிபோனது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது.

இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றது. எனினும் ரோகித் சர்மாவின் பேட்டிங் படுமோசமாக இந்த தொடரில் அமைந்து இருக்கிறது. அவர் இந்திய மண்ணில் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை தான் சதம் அடித்திருக்கிறார். இந்த நிலையில் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குஜராத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக ஹர்திக் பாண்டியா சந்தித்து இருக்கிறார். அமித்ஷாவின் மகன்தான் தற்போது பிசிசிஐ செயலாளராக நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா நடத்திய இந்த சந்திப்பு பெரும் முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது.

அடுத்த இந்திய அணியின் கேப்டனாக தாம் வருவதற்கு ஹர்திக் பாண்டியா இந்த சந்திப்பை பயன்படுத்தி இருக்கலாமோ என்று நம்பப்படுகிறது. மேலும் ஹர்திக் பாண்டியா குஜராத்தை சேர்ந்தவர் என்பதால் அமித்ஷாவும், அதற்கு ஓகே சொல்லி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் விரைவில் இந்திய அணி கேப்டன் பொறுப்பில் மாற்றம் நிகழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *